ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை!

0
84
Accident due to negligence of driver! Stopped Chennai!
Accident due to negligence of driver! Stopped Chennai!

ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை!

சென்னையில் மேடவாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எண்ணூர் நோக்கி கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் லாரி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் அடையாறு வழியாக சென்றுகொண்டிருந்தது. அடையாரில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அருகே சென்றபோது, எதிர்பாராமல், திடீரென சாலை தடுப்பு சுவரில் மோதிய லாரி நிலையான கட்டுப்பாடு இல்லாமல் கவிழ்ந்து விட்டது.

இதனால் டேங்கரில் இருந்து கச்சா எண்ணெய் முழுவதும் சாலையில் கொட்டி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் ராம் லால். 42 வயதான இவர் குடிபோதையில் இருந்துள்ளார். மேலும் அவரது தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அவர் எவ்வளவு மது அருந்தி இருந்தார் என்பதைப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய போலீஸார் முற்பட்டனர்.

ஆனால் அதற்கு ராம்லால் உடன்படவில்லை. அதன் காரணமாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து மது அளவு பரிசோதனையும் எடுக்கப்பட்டது. அதில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் தாறுமாறாக வண்டி ஓட்டி வந்ததால் தான் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி இருப்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அடையாறு பகுதியில் இந்த விபத்து நடந்து அதன் காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வண்டிகள் அங்கங்கே நின்றன.

நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. பின்னர் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து சாலையில் கொட்டி கிடந்த கச்சா எண்ணெயை நீண்ட நேரம் போராடி அகற்றிவிட்டனர். அதன்பின் சாலையில் கவிழ்ந்து கிடந்த ராட்சத கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பி அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.