நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை!

0
240
#image_title

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு நாடார் சமுதாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் 02.04.2023 அன்று இந்து சனாதன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கிறிஸ்தவர்களாக மத மாறிய நாடார்கள் நாடார்களே இல்லை என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் நாடார்களில் ஒரு தரப்பினர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் எந்த சமுதாயத்தை பற்றியும் விமர்சிக்காத அர்ஜுன் சம்பத் நாடார்களை மட்டும் விமர்சித்துள்ளார்.

இச்சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாண்டியனார் மக்கள் இயக்கம், பனங்காட்டுப்படை கட்சி, தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம், நாடார் விழிப்புணர்வு பேரவை, நாடார் மகாஜன சங்கம் வள்ளியூர், அகில இந்திய நாடார் சக்தி இயக்கம், காமராஜர் மக்கள் பேரியக்கம், தமிழ்நாடு நாடார் சங்கம், தென்மண்டல தமிழ்நாடு நாடார் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நாடார் சமுதாயம் சார்பில் மனு அளித்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் கூறுகையில், நாடார் சமுதாயத்தில் இந்து மற்றும் கிறிஸ்துவ சமயத்தை பின்பற்றும் நாடார்கள் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையில் வேறு சமுதாயத் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு தூத்துக்குடியில் கடந்த இரண்டாம் தேதி இந்து மக்கள் கட்சி சனாதன எழுச்சி மாநாட்டில் அர்ஜுன் சம்பத் பேசியிருப்பது, அவர் நாடார்கள் மீது கொண்டுள்ள வன்மத்தை காட்டுகிறது.

மேலும் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் எங்கள் நாடார் சமுதாயத்தை சார்ந்த அரசியல் கட்சி தலைவர்களை மிகவும் கீழ் தரமாகவும் மோசமாகவும் பேசியுள்ளார். குறிப்பாக தென் மாவட்டம் நாடார் சமுதாயம் பெரும்பான்மையாக வாழும் சமுதாயம் ஆகும். தென் மாவட்டங்களில் ஜாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக வேறு சமுதாயத்தவர்களை மேடையில் வைத்துக் கொண்டு நாடார் சமுதாயத்தை விமர்சித்து அவதூறு பரப்பி வரும் நாடார் சமுதாயம் அல்லாத அர்ஜுன் சம்பத்தின் இச்செயல் மிகவும் கண்டிக்கதக்கது.

மேலும் கிறிஸ்தவத்தை பின்பற்றும் நாடார்களை நாடார்களே இல்லை என இரண்டு வருடம் முன்பு தனியார் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். இதனால் நாடார்கள் மிகவும் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றனர்.

author avatar
Savitha