ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!!

0
172
#image_title

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!!

கள்ளக்குறிச்சி புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது திறந்து 3 நாளில் மூட வேண்டும் பகிரங்கமாக மிரட்டப்படுவதால் கண்ணீருடன் கதறி கதறி அழும் விதவை பெண். தர்ணா போராட்டத்தால் பரபரப்பு.

மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் திமுக எம்எல்ஏ குண்டர்கள் வைத்து மிரட்டப்படுவதாக கண்ணீரும் கதறலுமாக விதவைப் பெண் பகிரங்க குமுறலுடன் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவங்கூர் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த மாதம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பழைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒவ்வொரு பிரிவுகளாக புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்து வரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி விதவையின் கருணை அடிப்படையில் ஆவின் நிர்வாகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அவரை ஏற்ற ஆவின் நிர்வாகம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பரிசீலனை செய்து கலைச்செல்வி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே ஆவின் பாலகம் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தது. இதனால் ஆவின் பாலகம் சுமார் 2 லட்சம் செலவில் செலவு செய்து கலைச்செல்வி அமைத்தார்.

அந்த ஆவின் பாலகத்தைக் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். அதில் கிடைக்கும் சொற்ப வியாபாரத்தை வைத்து தற்போது பிழைப்பு நடத்தி வருகிறார்.இதனிடையே ஆவின் பாலகம் இந்தப் பகுதியில் மேலும் சிலர் அமைக்க காத்திருந்த நிலையில் அவர்களுக்கு கிடைக்காமல் விதவைப் பெண்ணுக்கு இந்த ஆவின் பாலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த ஆவின் பாலகத்தை அந்த விதவைப் பெண் தொடர்ந்து நடத்தக் கூடாது என சிலர் சதித்திட்டம் தீட்டி அந்த ஆவின் பாலகம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என சென்ற சில குண்டர்கள் அந்த ஆவின் பால்நிலையத்தை மூட வேண்டும் என டார்ச்சர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு சில குண்டர்கள் ஆவின் பாலகத்தை மூட வேண்டும் தொடர்ந்து நடத்த விட மாட்டோம் என பிரச்சனை செய்து அங்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் என்ன செய்வதென்றே தெரியாத அந்த விதவைப் பெண் கண்ணீரும் கம்பளியுமாக அழுது கொண்டு அங்கு காத்திருந்தார். அந்தப் பெண் கூறுகையில் ஆவின் பாலகத்தை வைக்க அனுமதி கொடுத்து விட்டு தற்போது மருத்துவ கல்லூரியின் முதல்வர் உஷா மற்றும் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அடியாட்கள் வைத்து குண்டர்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதனால் இரண்டு பிள்ளைகளை வைத்து கூலி வேலைக்கு செய்ய முடியாமல் இருந்த நான் இந்த இந்தப் பிழைப்பும் இல்லாமல் தற்போது பரிதவித்து வருவதாகவும் நேற்று காலையில் இருந்து அந்த ஆவின் பாலகத்திற்கு முன்பாகவே கண்ணீரும் கதறலுமா தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலகிவருகிறது.

author avatar
Savitha