மற்றொரு திமுக அமைச்சருக்கும் திடீர் நெஞ்சுவலியா?…விவகாரம் என்ன?

0
44

 

மற்றொரு திமுக அமைச்சருக்கும் திடீர் நெஞ்சுவலியா?…விவகாரம் என்ன?

 

 

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றார். அப்போது சேலத்தைக் கடந்து தர்மபுரி மாவட்டம் வழியாக காரில் பயணித்த போது அவருக்கு சிறிது படபடப்பு ஏற்பட்டு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் என்னும் இடத்தை நெருங்கிய போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி அதிகமாக காரை நிறுத்திய அமைச்சரின் உதவியாளர்கள் உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

 

சிகிச்சையில் அவருக்கு நெஞ்சில் பாதிப்பு இல்லை எனவும் அஜீரணக் கோளாறு தான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

 

 

தருமபுரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்களை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

 

 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதல்வரின் பையனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறுவயது நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

author avatar
Parthipan K