இரண்டு பெண்களுடன் ஒரு முதியவர் தற்கொலை! காரணம் இதுவா? அதிர்ச்சியில் மக்கள்!

0
52
An old man commits suicide with two women! Is this the reason? People in shock!
An old man commits suicide with two women! Is this the reason? People in shock!

இரண்டு பெண்களுடன் ஒரு முதியவர் தற்கொலை! காரணம் இதுவா? அதிர்ச்சியில் மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள புலியூர் ஊராட்சி கசுவா கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.. இவரது சொந்த ஊர் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஆகும்.

இவருடைய மனைவி மற்றும் ஒரு மகள் ஏற்கனவே இறந்து விட்டதால் மனவேதனையுடன் இருந்த செல்வராஜ், தன்னுடைய மற்ற 2 மகள்களான ஹேமலதா (35), சாந்தி (30) ஆகியோருடன் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்து விட்டார்.

இவர்களில் ஹேமலதாவுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதால், அவர் தந்தையுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற அச்சமும் அவர்களிடம் இருந்தது.

அதன் காரணமாக, அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அவர்களது வீட்டின் கதவு பூட்டியே இருந்ததாக தெரிகிறது. நேற்று செல்வராஜின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையிலான போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது மின்விசிறி மாட்டும் கொக்கியில் ஒரே கயிற்றில் செல்வராஜ், தனது மகள்கள் ஹேமலதா, சாந்தி ஆகியோருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருப்பதால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து போலீசார், அவரது வீட்டை சோதனை செய்த போது, அங்கிருந்த புத்தகத்தில் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.அதில் அவர்கள் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், நாங்கள் இறந்த பின்னர் எங்களது உடலை இந்த கிராமத்திலுள்ள சேவாலயா அறக்கட்டளையின் சார்பில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் எழுதி இருந்தனர்.

இதற்காக எங்களிடம் உள்ள ரூ.4 ஆயிரத்து 200, 6 கிராம் தங்க நகைகள் மற்றும் நாங்கள் வசித்து வந்த இந்த வீட்டுக்கான 5½ சென்ட் நிலத்தின் பத்திரம் போன்றவற்றை இந்த கடிதத்துடன் வைத்துள்ளோம். அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். எங்களது உடலை உறவினர்கள் யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் பணம், தங்க நகை, வீட்டுப்பத்திரம், கடிதம் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.