நெருங்கும் தீபாவளி: buy one get one offer!! ரூ 8.46 லட்சம் அபேஸ்! எச்சரிக்கை விடுத்த அரசு!

0
84

நெருங்கும் தீபாவளி: buy one get one offer!! ரூ 8.46 லட்சம் அபேஸ்! எச்சரிக்கை விடுத்த அரசு!

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினத்தன்று உறவினர்கள் ஒருவருகொருவர் வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்புவது வழக்கம். அதேபோன்று,இது போன்ற பண்டிகை தினத்தில் இது வாங்கினால் அது ஃப்ரீ போன்ற ஆஃபர் மெசேஜ் அதிகம் வரும்.

ஆனால் சமீப காலமாக,பிரபல கம்பெனியின் லோகோவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் ஆஃபர் மெசேஜ் அனுப்பி வங்கிக்கணக்கை முடக்கம் செய்யும் நூதன கொள்ளை அரங்கேறி வருகிறது.இது குறித்து, சமீபத்தில் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேஸ்புக்கில் பிரபல ஃபுட் ஆர்டர் கம்பெனியின் ஒரிஜினல் லோகோவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் பை ஒன் கெட் ஒன் ஆஃபரை வெளியிட்டுள்ளது.
இதனைப் பார்த்த 51 வயது பெண்மணி இதனை வாங்க முயன்று அந்த லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களுக்கு பதில் அளித்துள்ளார்.உடனடியாக இவரின் செல்ஃபோன் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்குகளை முடக்கி 8.46 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தினை தொடர்ந்து மீண்டும் மத்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைச்சகம் இது போன்ற போலியான ஆஃபர்களை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறு உங்கள் போனிருக்கு லிங்குடன் வரப்படும் மெசேஜை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Pavithra