நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை! பட்டாசு விற்பனையை எதிர்நோக்கும் சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள்!

0
91

தீபாவளி, பொங்கல், ஆடிப்பெருக்கு, ஆயுத பூஜை, விஜயதசமி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்கள் வந்தால் போதும்.

தமிழ்நாடு முழுவதும் மளிகை கடைகள், பெட்டி கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், ஜவுளி கடைகள் இனிப்பு பலகாரங்கள் விற்கும் பேக்கரிகள் உட்பட பல்வேறு கலைகளில் விற்பனை கலை கட்டும்.

இவை அனைத்தையும் தாண்டி சிறப்புமிக்க ஒரு பண்டிகையாக தீபாவளி பண்டிகை காணப்படுகிறது. தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் இந்த தீபாவளி ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வந்தால் போதும் பட்டாசு வியாபாரத்தை எதிர்நோக்கி வியாபாரிகள் காத்திருப்பார்கள்.

இந்த சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் உலக அளவில் பிரபலமான ஒரு கிராமமாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடுவதற்கு சிவகாசி பகுதி தயாராக உள்ளது. அதோடு பட்டாசு வியாபாரத்தை வியாபாரிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பட்டாசு கடையிலும் வாடிக்கையாளர்கள் கவரப்படும் வகையிலான வண்ண மின் விளக்குகளால் பட்டாசுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் ஆயுத பூஜைக்கு பிறகு வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வந்து பட்டாசுகளை வாங்கி செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் பட்டாசு வியாபாரிகள் காத்திருக்கிறார்கள்.