சபரிமலையில் அரவணை பிரசாதம்- தரமற்ற பொருள் !!

0
112
#image_title

பூச்சிக்கொல்லி உள்ளடக்கம் கொண்ட ஏலக்காய் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் அரவணை மாதிரியை மீண்டும் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது: கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது:

சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் அரவணையில் பயன்படுத்தும் ஏலக்காய் தரமில்லாத ஏலக்காய் பயன்படுத்தப்படுவதாக கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திருவனந்தபுரத்தில் சோதனை செய்ததில் ஏலக்காய் தரமில்லாமல் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதை ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் ஏலக்காயை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் அதில் ஏலக்காய் தரமில்லாமல் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் 14 பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சிக்கொல்லி மருந்துகளின் இருப்பு அதிகமாக இருப்பதாகவும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.சாப்பிடக்கூடாத ஏலக்காய் கொண்ட அரவணை வினியோகிக்கக் கூடாது என்றும், இதை உணவு பாதுகாப்பு அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட அரவணை விற்பனைக்கு ஜனவரி 11ம் தேதி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

2011ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி அரவணை சாப்பிடத் தகுதியற்றது என்பதால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. 6,65,159 அரவணை கேன்கள் சாப்பிட முடியாதவை எனக் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டு குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனை அழித்தது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டிருந்தது.

ஜனவரி 12 முதல் ஏலக்காய் பயன்படுத்தாமல் அரவணை தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவசம் போர்டு மீண்டும் மத்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் ஆய்வகத்தில் மீண்டும் அரவணையை சோதனைக்கு அனுப்ப க்கோரி தேவசம் போர்டு கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி அனில் கே நரேந்திரன் மற்றும் நீதிபதி பி ஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பூச்சி கொல்லி கலந்த அரவணை சாப்பிட உகந்தது அல்ல என்று தெரிந்தும் மீண்டும் பரிசோதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறிய கேரளா உயர்நீதிமன்றம் தேவசம் போர்டின் மனுவை நிராகரித்தது.இந்நிலையில் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அரவணை மாதிரியை மீண்டும் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதித்து தேவசம்போர்டு கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் குடோனில் சீல் வைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அரவணை அழிக்கவுள்ளதாக தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 5 மாதங்கள் கடந்துள்ளதாகவும், இந்த அரவணையை பக்தர்களுக்கு விற்கத் திட்டமிடவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

author avatar
Savitha