அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!!

0
34

அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!!

நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது.

சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும்.

அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் உடலின் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது மற்றும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக வளரவும் வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக உடலில் முடி அதிகம் இருக்கும் இடங்களில் கொப்பளங்கள் தோன்றலாம்.

கொப்பளங்கள் உருவாவது மற்றும் தொற்றுவதில் இருந்து எப்படி தடுப்பதுகொப்பளங்கள் உருவாவதை கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சருமம் தடிக்கும் வரை கொப்பளம் உருவாவதை நாம் அறிந்து கொள்ள முடியாது.

அப்படி தடிப்புகள் உண்டான இடங்களை கிள்ளவோ, சொரியவோ, கீறவோ கூடாது என்பது முக்கியமாக அறிவுறுத்தப்படுகிறது. வலியுடன் கூடிய சரும தடிப்புகள் இருந்தால் நாளடைவில் அது கட்டியாக உருவாகலாம்.

எந்தெந்த காரணங்களால் இந்த கொப்பளம் வருகின்றது என்று உங்களுக்கு தெரியுமா??

1: தலையில் அழுக்குகள் அதிகமாக இருந்தால் கொப்பளம் வரும்.

2: எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த கொப்பளங்கள் வரும்.

3: உடல் உஷ்ணம் அதாவது தண்ணீர் மிகவும் குறைவாக கொடுப்பவர்களுக்கு இந்த கொப்பளம் வரும்.

உடலில் உள்ள கொப்பளம் மறைய நிறைய மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு அதன் பின் விளைவுகளையும் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு பிரச்சனையையும் நாம் அதனை சிறிதாக இருக்கும்போதே தெரிந்துகொண்டால் அதை பெரியதாகமல் அதற்கேற்ற வைத்தியத்தை செய்திருக்காலம்

தேவையான பொருட்கள்

மஞ்சள்

கற்றாழை

சந்தனம்

தயிர்

செய்முறை

1: முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சந்தனம், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் தயிர் இவை மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.

2: எடுத்து வைத்த இந்த பொருட்களை நன்றாக மிக்ஸ் செய்யவும்.

3: நன்றாக மிக்ஸ் செய்தவுடன் அதில் சிறிதளவு மஞ்சள் சேர்க்கவும்.

இவை ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும்வரை மிக்ஸ் செய்ய வேண்டும்.

4: பிறகு எந்த இடத்தில் உங்களுக்கு கொப்பளங்கள் உள்ளதோ அந்த இடத்தில் இதனை தடவ வேண்டும்.

5: இதேபோன்று தொடர்ச்சியாக தடவி வந்தால் அந்த கொப்பளங்கள் அனைத்தும் பழுத்து உடைந்து தழும்புகளின் இன்றி மறைந்துவிடும்.

author avatar
Parthipan K