கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது!

0
235

கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது!

பத்து நிமிடத்தில் வீட்டில் இருக்கக் கூடிய கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டியடிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். 200% நன்றாக செயல்படும்.

மழைக்காலம் தொடங்கினாலே கொசுக்களின் எண்ணிக்கையும் பெருகிவிடும். இதற்கு நாம் கடைகளில் கொசு விரட்டியோ, லிக்விடோ வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள ரசாயனங்கள் நமக்கு மூச்சு திணறல்,ஆஸ்துமா உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கொசுக்கள் முழுமையாக வெளியேறும் என்பதை நாம் நம்பிக்கையாகவும் சொல்ல முடியாது. ஆனால் இந்த முறையை பயன்படுத்தும் பொழுது கொசுக்கள் வெளியேறும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

முதலில் அகல் விளக்கு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை மண்ணினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்வது நல்லது. பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்.  இதில் சாம்பிராணி ஒன்றை எடுத்து இரண்டாக உடைத்து ஏற்றிக் கொள்ளவும். சாம்பிராணியில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதை பயன்படுத்துவது நல்லது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பின்னர்  இதன் மேல் பச்சை வேப்பிலைகள் ஐந்து முதல் பத்து வரை சிறிது புகை வெளியேறும் அளவு இடைவெளி விட்டு அகல் விளக்கின் மேல் வைக்கவும். வேப்பிலை பச்சையாக கிடைக்கவில்லை எனில் நாட்டு மருந்து கடைகளில் வேப்பிலை பொடி கிடைக்கும். அதனை வாங்கி அகல்விளக்கின் அடியில் சிறிது தூங்கி விட்டு பின்னர் சாம்பிராணி ஏற்றிவிட்டு அதன் மேல் சிறிது பொடியை தூவ வேண்டும். பின்னர் இரண்டு பல் பூண்டை தோலுடன் கல்லில் தட்டி அதன் மேல் வைக்கவும். சாம்பிராணி புகை வேப்பிலை மற்றும் பூண்டுடன் சேர்ந்து வரும் மணத்திற்கு ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. அதுமட்டுமில்லாமல் இது இயற்கையான முறை என்பதால் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

 

 

 

Previous articleமக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ!
Next articleடெலெக்ராமில் படம் டவுன்லோட் செய்பவர்களாக நீங்கள்? எச்சரிக்கை! பணம் பறிபோகும் ஆபத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here