மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

0
58
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். குடும்ப உறவு பக்கபலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் கூடவே வந்து சேரும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு செலவுகள் காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani