அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

0
101

அரியலூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் நவம்பர் மாதம் 11ஆம் தேதிக்குள் சரியான கல்வி தகுதி சான்றிதழ் உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலியிடங்கள் தொடர்பான விபரம்

ஆய்வக நுட்புநர் நிலை 2: 34 காலிப்பணியிடங்கள்

கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பட்டப் படிப்பு அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஓட்டுனர்:2 காலி பணியிடங்கள்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஹெவி லைசென்ஸுடன் 5 வருடங்கள் முன் அனுபவம் பெற்று எடுக்க வேண்டும்.

வார்டு உதவியாளர் மருத்துவமனை பணியாளர் வண்டி தள்ளுணர் நீற்றும் துப்புரவு பணியாளர்

முறையே 10, 12, 6, 19

கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பொது நிபுனைந்தைகள்: மேற்படி பணிகள் தற்காலிகமாக தொகுப்பு கூடிய அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆதார் அட்டை மற்றும் உரிய கல்வித் தகுதி சான்றிதழ் உடன் முதல்வர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரியலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11-11-2022

தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் சிபாரிசு முதலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுடைய விண்ணப்பம் பரிசளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.