தமிழக அரசிற்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு!

0
68

ஆறுமுகசாமி ஆணையம் குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து இருக்கின்றது உச்சநீதிமன்றம்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய விசாரணையை ஆரம்பித்தது அப்பல்லோ மருத்துவர்கள் நிர்வாகத்தினர் உட்பட இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கின்றது.

இதற்கிடையே அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்ட காரணத்தால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையும் முடங்கிப் போயிருக்கிறது இந்த தடையை அகற்றக் கோரி தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது சென்ற முறை ஆறுமுகசாமி ஆணையத்தின் விவகாரம் குறித்த விவரங்களை மனுதாரர் அப்பல்லோ மருத்துவமனையும் எதிர்மனுதாரர் தமிழக அரசும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான அப்துல் நசீர் வேறொரு வழக்கை விசாரணை செய்தார் இதைத்தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை நான்கு வார காலத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த மேல்முறையீட்டு விசாரணை தாமதமாவதை தமிழக அரசின் வழக்கறிஞரும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கின்றார் இந்த நிலையில் விரைவில் ஆறுமுகசாமியின் அனைத்திற்கு தடை விலகும் என்று எதிர்பார்த்த நிலையில் அரசுக்கு ஒரு பின்னடைவாக இந்த தீர்ப்பு கருதப்படுகின்றது.