மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? 

0
27
#image_title
மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!?
நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி அஷ்வின் அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றது. இந்த பத்து அணிகளும் உலகக் கோப்பையில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளது. இந்நிலையில்  உலகக் கோப்பை தொடரில் விளையாடும் அணியை இந்தியா தற்பொழுது உறுதி செய்துள்ளது.
அதாவது உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்பர் படேல் அவர்கள் இடம் பெற்றிருந்தார். ஆனால் அக்பர் படேல் அவர்களுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. அதனால் இவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்றாலும் வீரர் யார் என்ற கேள்வி வந்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அக்சர் படேல் அவர்களுக்கு பதிலாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவி அஷ்வின் அவர்களின் பெயரை சேர்த்துள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் பயிற்சி போட்டியில் பங்கேற்பதற்காக ரவி அஷ்வின் அவர்கள் தற்பொழுது இந்திய அணியுடன் கவுகாத்தி சென்றுள்ளார். ரவி அஷ்வின் விளையாடவிருக்கும் மூன்றாவது உலகக் கோப்பை தொடர் இதுவாகும்.
இதற்கு முன்னர் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்பொழுது ரவி அஷ்வின் இந்திய அணியில் இருந்தார். ஒரு சில போட்டிகள் விளையாடினார். அதே போல 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தெடரிலும் ரவி அஷ்வின் அவர்கள் இருந்தார். 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அனைத்து பள்ளிகளிலும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.
இந்நிலையில் ரவி அஸ்வின் தனது மூன்றாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ரவி அஷ்வின் அவர்கள் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களின் இறுதி பட்டியல்…
ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோஹ்லி, சூரியக்குமார் யாதவ், சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவி அஷ்வின், ஷர்தல் தக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், இஷான் கிஷன்.