நியூசிலாந்துக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி

நியூசிலாந்துக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி

வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகளை நியூசிலாந்து அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தேசிய அணி விளையாட இருக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி சில முதல்தர போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக சுமார் 40 முதல் 45 வீரர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. முன்னணி வீரர்கள் சென்றால் பாகிஸ்தானில் … Read more

ரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா

ரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,218 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 142 பேர் பலியாகினர்.

கரிபியன் லீக்: இறுதிபோட்டிக்குள் நுழைந்த நைட் ரைடர்ஸ் அணி

கரிபியன் லீக்: இறுதிபோட்டிக்குள் நுழைந்த நைட் ரைடர்ஸ் அணி

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து முன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு இந்திய தீவில் கரிபியன் பிரிமீயர் லீக் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியது. முதலாவது அரைஇறுதியில் ஜமைக்கா தல்லாவாஸ்-டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா 20 ஓவர்களில் 7 … Read more

சக்தி வாய்ந்த அணியாக மாறுமா பெங்களூரு அணி?

சக்தி வாய்ந்த அணியாக மாறுமா பெங்களூரு அணி?

மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் ஒரு முறை கூட பட்டம் வெல்லாத ஒரே அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தான். ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் இருந்தும் சீரற்ற ஆட்டமும், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மிரள்வதும் தொடர்கதையாகிறது. இத்தனைக்கும் உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். புதிய லோகோ, சில புதிய வீரர்களின் பிரவேசம், பயிற்சி குழுவில் மாற்றம் என்று வழக்கம் போல் அணி செதுக்கப்பட்டு களம் காணுகிறது. … Read more

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம்  நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது. சர்வதேச அரசியல் ராஜதந்திரம் மற்றும் மக்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்திய … Read more

பாகிஸ்தானில் எதிர்பாராத நடந்த சோகம்

பாகிஸ்தானில் எதிர்பாராத நடந்த சோகம்

கைபர் பக்துங்வா என்ற மாகாணம் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்  மொஹமண்ட் மாவட்டத்தில் உள்ளது. இங்கு பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நேற்று வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. … Read more

78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கிய காட்டுத்தீ

78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கிய காட்டுத்தீ

லிபோர்னியாவில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் … Read more

கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரச்சாரங்கள்  சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர்களும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். இந்நிலையில், வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபரானால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்று தெரிவித்தார். கமலா ஹாரிசை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்று கூறிய டிரம்ப், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் … Read more

மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு !

மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு !

மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு ! ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை பொதுஜன பேரமுலா கட்சியின் மக்களவை உறுப்பினராக இலங்கையில் ரத்னபுற மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.பிரேமலால் ஜெயசேகரா என்பவர். இவரை அண்மையில் கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தொண்டர்கள் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதால் கடந்த … Read more

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் :?

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் :?

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற போது நிர்வாணமாக்கப்பட்டு,அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த வாலிபர் வினோத்குமார் வெட் டிசைனராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கு பேஸ்புக் மூலம் நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பெண் அவ்வப்போது ஆபாச படங்களை அனுப்பி வைக்குமாறு சபலத்தை தூண்டி விட்டுள்ளார் .இதனை அடுத்து சாபத்திற்கு ஆளான … Read more