கொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!

கொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவறை மிக மோசமாக இருக்கிறது என்று நோயாளிகள் புகார் தெரிவித்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தாமாக முன்வந்து கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு உள்ளது. இங்குள்ள சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லடி கிருஷ்ண ராவ், சென்றிருந்தார். அப்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று … Read more

கரீபியன் லீக் : பொல்லார்ட் அதிரடியால் கடைசி ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி

கரீபியன் லீக் : பொல்லார்ட் அதிரடியால் கடைசி ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

அர்ஜெண்டினாவில் கட்டுப்பாடு இல்லாத ஊரடங்கு

அர்ஜெண்டினாவில் கட்டுப்பாடு இல்லாத ஊரடங்கு

அர்ஜெண்டினாவில் எப்பொதும் இல்லாத அளவில்கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் நேற்றுப் பதிவாயின. கடந்த 24 மணிநேரத்தில் அங்குப் புதிதாக 11,717 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அர்ஜெண்டினாவில் கடந்த மார்ச் மாதம் நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியுடன் முடிவுறும். இருப்பினும் நோய்த்தொற்று தொடர்பாக அங்கு அறிவிக்கப்பட்ட அந்தக் கட்டுப்பாடுகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது பொது இடங்களில் 10 பேர் ஒன்றுகூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன் 2 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி … Read more

சீனாவில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

சீனாவில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் … Read more

விளையாட்டு துறையில் அதிகரிக்கும் பரிசுத்தொகை

விளையாட்டு துறையில் அதிகரிக்கும் பரிசுத்தொகை

மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளையொட்டி டெல்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண்  ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபொது, விளையாட்டு மற்றும் சாகச விருதுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகை ரூ .15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை மந்திரி தெரிவித்தார். தேசிய விளையாட்டு தினத்தையொட்டி … Read more

ஐபிஎல் : சென்னை அணிக்கு சோதனைமேல் சோதனை

ஐபிஎல் : சென்னை அணிக்கு சோதனைமேல் சோதனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ஐக்கிய … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 87 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,045 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

முதன் முறையாக புதிய முறையில் விருது வழங்கும் விழா

முதன் முறையாக புதிய முறையில் விருது வழங்கும் விழா

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக அரங்கேறும் இந்த விழா முதல்முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கிறது. இதன்படி தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார். விருது பெறுபவர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தால் … Read more

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் பாஜகவின் மாநில துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பணி நியமனம் செய்து வைத்துள்ளார்.   அண்மையில் நான்கு நாட்களுக்கு முன்னாடி ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.   அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவராக பணி நியமனம் பெற்றுள்ளார்.   இந்த நிகழ்வானது, பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகள், ஏற்கனவே கட்சியில் உள்ள முக்கிய … Read more

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய போதை ஆசாமி!!

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய போதை ஆசாமி!!

கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை, போதையில் வந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளராக அப்பகுதியை சேர்ந்த மாயவன் என்வர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை ஊராட்சி சம்பந்தமான பணிகளை செய்ய வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நன்கு குடித்துவிட்டு மாயவனின் வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த … Read more