தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 107 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,998 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

அமெரிக்கா – சீனா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்கா - சீனா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்க-சீன உயர் அதிகாரிகள் முதல் கட்டப் பொருளியல் உடன்படிக்கைக்குப் பிறகும் அடுத்தகட்ட பேரப்பேச்சைத் தொடர, இணக்கம் கண்டுள்ளனர். இருநாட்டு அதிகாரிகளும் தொலைபேசி வழி கலந்துரையாடினர். இருதரப்புக்குமிடையே சில விவகாரங்களின் தொடர்பில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அண்மைத் தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவும், சீனாவும் இந்த ஆண்டு ஜனவரியில் முதல்கட்ட உடன்பாட்டைச் செய்துகொண்டன. அதன்கீழ், பெய்ச்சிங் அடுத்த ஈராண்டுக்கு 200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யவேண்டும். கார்கள், இயந்திரங்கள், எண்ணெய், வேளாண்-பொருள்கள் போன்றவை அவற்றில் அடங்கும். … Read more

பயங்கரவாத இயக்கம் தனது தாக்குதலை குறைந்திருப்பதாக தகவல்

பயங்கரவாத இயக்கம் தனது தாக்குதலை குறைந்திருப்பதாக தகவல்

ஐ. எஸ் (IS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்துவது தொடர்பான அச்சுறுத்தல் குறைந்திருப்பதாக, ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கிருமிப் பரவலை முன்னிட்டு, உலக நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பல நாடுகளில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஐஎஸ் அமைப்பின் ஆள்சேர்ப்பு நடவடிக்கை, நிதி திரட்டல் போன்றவை பாதிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிருமிப் பரவல் சூழலில் கூடுதலானோர் இணையத்தைப் பயன்படுத்துவதால், பயங்கரவாத அமைப்புகள் நிதி … Read more

எப்போ தான் கல்யாணம்? இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதில் என்ன?

எப்போ தான் கல்யாணம்? இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதில் என்ன?

திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக ஒரு பெண் நடிகை வளர்ந்து வருவது சற்று கடினமான செயல் எனலாம். அவ்வகையில் இந்த காலத்தில் இருந்தே ஜெயலலிதா, சாவித்திரி, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் ஆண் நடிகர்களுக்கு இணையாக தங்களுக்கு என ஒரு பதிவை சினிமா துறையில் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஹீரோக்களுக்கு இணையாக வலம் வருவதோடு அவர்களுக்கு நிகரான சம்பளம், ரசிகர் பட்டாளம், நிலையான கதையம்சம், நீண்டகால திரைப்பயணம் என்று கலக்கிய ஹீரோயின்களின் எண்ணிக்கை கணிசமே. அவ்வகையில் கேரள … Read more

மதுரை அருகே 10 டன் ரேஷன் அரிசி பதுக்கல்!!

மதுரை அருகே 10 டன் ரேஷன் அரிசி பதுக்கல்!!

மதுரை அருகே ஒரு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து 4 மாதங்களாக மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வந்தது. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் அதிக அளவு கொண்டது அரிசி தான். அதனால் பல இடங்களில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி … Read more

ஆஸ்திரேலியாவில் நீடிக்கபோகும் நெருக்கடிநிலைக்கான கால வரம்பு

ஆஸ்திரேலியாவில் நீடிக்கபோகும் நெருக்கடிநிலைக்கான கால வரம்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம், நெருக்கடிநிலைக்கான கால வரம்பை நீட்டிக்க, அதன் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது. தற்போது அங்கு 6 மாதங்களுக்கு மட்டுமே நெருக்கடிநிலையை அமல்படுத்த இயலும். கால வரம்பை 18 மாதங்கள் வரை நீட்டிக்க விக்டோரியா மாநில அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். புதிய சட்டங்களால், நெருக்கடிநிலை முடிந்த பின்னரும், கடுமையான பொதுச் சுகாதார நெறிமுறைகளை அமலாக்க முடியும். ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இன்று கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கிடையே கூடவுள்ளது. முதல்முறையாக, உறுப்பினர்கள் சிலர் காணொளி வழியாக நாடாளுமன்றக் … Read more

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

விமானத்தில் செல்வோர் முகக் கவசம் அணிய மறுத்தால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா சூழலில், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, பயணிகள் முகக் கவசம் அணிவது முக்கியம் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது. மிகப் பெரும்பாலான பயணிகள், அதன் அவசியத்தை உணர்ந்து தவறாமல் அதைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அண்மையில் பயணிகளில் சிலர் முகக் கவசம் அணிய மறுத்து விமானப் பணியாளர்களோடு பூசலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாயின. மிகச் சிலரது … Read more

தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்… !

தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்... !

தமிழக அரசு தற்போது விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக விவசாய பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது .இதன் காரணமாக இலவச மின்சாரம் பறி போகும் வாய்ப்பு உள்ளதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இருப்பினும் இதன் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ளவே மின் மீட்டர் பொருத்துவாக தமிழக அரசு விவசாயிகளிடம் விளக்கம் … Read more

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள்: காங்கிரஸ் திமுக அச்சம்

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள்: காங்கிரஸ் திமுக அச்சம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தற்போது டெல்லியில் முரளிதர ராவ் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதில் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்த அண்ணாமலை, “திருக்குறளில் இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” எனும் திருக்குறளுக்கு முன்னுதாரணமாக பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி தற்போது இருக்கின்றனர் என கூறினார். “தான் கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாக மட்டுமே சேர்ந்துள்ளேன். கட்சியின் … Read more

அதிபர் தேர்தலில் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெற வாய்ப்பு

அதிபர் தேர்தலில் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெற வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், எதிர்த்தரப்பினர் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெறக்கூடும் எனத் தமது குடியரசுக் கட்சியினரை எச்சரித்துள்ளார். கொரோனா சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கர்களை ஏமாற்றும் முயற்சியில் எதிர்த்தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அவர் குறைகூறினார். ஜனநாயகக் கட்சி நடத்திய மாநாட்டில், எதிர்மறை அம்சங்கள் நிறைந்திருந்ததாகக் குடியரசுக் கட்சியினர் கூறினர். ஆனால், தங்களது மாநாடு அவ்வாறு இல்லாமல் நடைபெறுமென அவர்கள் உறுதி கூறினர். இதுவரை வெளியிடப்பட்ட முன்னோடிக் கருத்துக் கணிப்புகளில், ஜனநாயகக் … Read more