மதுரை அருகே 10 டன் ரேஷன் அரிசி பதுக்கல்!!

0
69

மதுரை அருகே ஒரு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து 4 மாதங்களாக மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வந்தது. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் அதிக அளவு கொண்டது அரிசி தான். அதனால் பல இடங்களில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைப்பது அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தும் அரிசி பதுக்கல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் செயல்பட்டு வரும் ஒரு ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே காவல்துறையினர் வருவதை அறிந்த ஆலை உரிமையாளர் சரவணன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சரவணனின் தந்தை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K