143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

சென்னை: 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-கூடூர் மார்க்கங்களில் அதிவேகமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சோதனையின் போது தண்டவாள பாதைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம் என்று தெற்கு … Read more

சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

கடந்த மே மாதம் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய ராணுவத்திற்கும்,சீன ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிறைந்த சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி நடைப்பெற்ற மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வானது இந்தியா – சீனா இடையே போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியது.இதன் எதிரொலியாக சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் சமூகவலைதளங்களில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்,தடை செய்ய வேண்டும் என்று … Read more

எம்.பி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

எம்.பி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி வசந்த குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனா வைரஸ் பாதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில்தான் வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

டோனி சிறந்த மனிதர்

டோனி சிறந்த மனிதர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நிகழ்ச்சியில் டோனி பற்றி கூறும்போது அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த மனிதர் ஆவார். போட்டியின் போது எந்தவித பதட்டமும் இன்றி செயல்படுவார் அந்த திறமையே அனைவரும் பார்த்து வியக்கத்தக்கதாக உள்ளது. மேலும் அவர் இளம் வயதிலேயே 2007 ல் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் போட்டியின் போது அவர் … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி:மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிகரிப்பு

டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி:மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.29 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.93 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிகரித்ததால்,கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து 45,000 அடி முதல் 1.5 லட்சம் கனஅடியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து … Read more

இந்தியாவிற்கே பெருமை சேர்க்க போகும் அந்த நாள்?

இந்தியாவிற்கே பெருமை சேர்க்க போகும் அந்த நாள்?

இந்தியாவில் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் ஆனால் இந்த முறை உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக அமைந்த கொரோனா வைரஸ் பெரிய ஆபத்தையும் உண்டாக்கி வருகிறது. இந்த நிலையில் முன்புபோல் கொண்டாட முடியும் என நம்பிக்கை இல்லை இருந்தாலும் இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது இந்திய தேசியக்கொடி பறக்க உள்ளது இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையாகும்.

கொரோனா அச்சுறுத்தலை மீறி துருக்கியில் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட ஷூட்டிங்!! 

கொரோனா அச்சுறுத்தலை மீறி துருக்கியில் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட ஷூட்டிங்!! 

பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனது இயல்பான நடிப்பினால் உயர்ந்துள்ளார். இவர் மற்றவரிடம் அணுகுமுறையே ரொம்ப எதார்த்தமாகவும் பிரம்மிப்பூட்டும் அளவிற்கு இருக்கும். அந்த குணத்தினால் தான் அவர் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். விஜய் சேதுபதி தற்போது அமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்திலும் முக்கியமான கேரக்டரில் அவர் … Read more

வம்புக்காரி மீரா மிதுனுக்கு  கடும் கண்டன அறிக்கை: இயக்குனர் சங்க தலைவர்!! இவர் வெகுண்டெழு காரணம் இதுதானா? தெரியாம போச்சே!!

வம்புக்காரி மீரா மிதுனுக்கு  கடும் கண்டன அறிக்கை: இயக்குனர் சங்க தலைவர்!! இவர் வெகுண்டெழு காரணம் இதுதானா? தெரியாம போச்சே!!

பாலிவுட் முதல் கோலிவுட் வரை யாரையும் விட்டுவைக்காமல் வம்புக்கு இழுக்கும் வம்புகாரி மீரா மிதுன் நெட்டிசன்கள் சரமாரியாக கழுவி கழுவி ஊற்றினாலும் அடங்கமாட்டார். கதாநாயகிகள் எல்லாம் என்னை காப்பி அடிக்கின்றனர் என்று ஹீரோயின்களை சீண்டிய மீரா மிதுன், அதைத்தொடர்ந்து நடிகர் விஜய், சூர்யா, கமலஹாசன் என அவர்களையும், அவர்களுடைய மகள், மகன், மனைவி குடும்பத்தாரையும் தரக் குறைவாக பேசிய வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். அவர்களுடைய ரசிகர்கள் பலவகையில்  அவமானப்படுத்தினர். இறுதியில் மீரா மிதுன் கண்ணீர் … Read more

இறந்த மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய கணவர்! நெகிழ்ச்சியில் உறவினர்கள்!!

இறந்த மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய கணவர்! நெகிழ்ச்சியில் உறவினர்கள்!!

ஆந்திர மாநிலத்தில் இறந்து போன மனைவியின் நினைவாக அவரது கணவன், ‘புதுமனை புகுவிழா’வில் மனைவியின் உருவச்சிலையை அச்சு அசலாக மெழுகில் செய்து வடிவமைத்து இடம் பெறச் செய்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. ஆந்திர மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கோபால் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ் குப்தா. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதன்பின் ஸ்ரீனிவாஸ் குப்தா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை … Read more

உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் மேல் பரவியுள்ளது. அதில் மிகவும் பாதிக்கபட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் ஆகும். பிரேசிலில் வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும்  1 லட்சத்தை கடந்தது. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.