சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனா மெதுவாக இயல்பு நிலைக்கு வந்த நிலையில் சீனத் தலைநகரான  பீஜிங் அருகே  கொரோனா வைரஸ் கடந்த மாதம்  மீண்டும் பரவத் துவங்கியது. பீஜிங்கில் உள்ள  இறைச்சி சந்தையில் பணிபுரிவரிகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று  பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவின்  மற்றும் ஒரு மாகாணமான சின்ஜியாங்கில் ஒரே நாளில் 112 பேருக்குக் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. சின்ஜியாங்கின் தலைநகரில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,000-க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் … Read more

பக்ரீத் கொண்டாட்டம் ஏன்? பக்ரீத் என்பது தியாகத் திருநாளா? உண்மையில் பக்ரீத் எதற்காக கொண்டாடப்படுகிறது?

பக்ரீத் கொண்டாட்டம் ஏன்? பக்ரீத் என்பது தியாகத் திருநாளா? உண்மையில் பக்ரீத் எதற்காக கொண்டாடப்படுகிறது?

பக்ரீத்னா என்ன? பக்ரா – ஆடு. ஈத் – பண்டிகை.     இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் முதலாவது – ரமலான் எனப்படும் ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர்). இரண்டாவது பண்டிகை – தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் (ஈதுல் ஸுஹா).   ஏன் இது தியாகத் திருநாள் என அழைக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.   சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களை, தன் மனைவியையும் மகன் இஸ்மாயிலையும் வறண்டு கிடந்த அரேபியப் … Read more

கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

அமெரிக்காவில் விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை பல்லாண்டு காலமாக கற்பித்து வந்த ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி கலிபோர்னியா மாகாணத்தில்  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை இப்போது நடத்தி முடித்து உள்ளார். அவர் விமானத்தை அனைவர் முன்னாடியும் இயக்கியும் காட்டினார். இதன் காரணமாக உலகிலேயே அதிக வயதான விமான பயிற்சியாளராகவும், விமானியாகவும் தன்னை அடையாளப்படுத்தி கின்னஸ் சாதனையை   நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்விற்கு முன்பு 98 வயதான ஆண்தான் அவர் அயோவா மாகாணத்தை … Read more

பங்குச் சந்தை திடீர் பல்டி!

பங்குச் சந்தை திடீர் பல்டி!

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான 335 சென்செக்ஸ் புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 100.70 புள்ளிகளில் குறைந்தது. பங்குச்சந்தை புதன்கிழமை ஏற்றத்துடன் முடிந்தது இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வர்த்தகம் நேர்மையுடன் தொடங்கியது. ஆனால் பிற்பகலில் வங்கி நிதி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும் பெரிதும் … Read more

7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம்

7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பலோம்பே  நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.  மாலவி நாட்டில் இதுவரை 3,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுபோல் கென்யா அதிகாரிகள், ஜூலை தொடக்கத்தில், கொரோனா ஊர்டங்கின்  போது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என … Read more

சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்,வேலூர்,விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளின் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இதில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையுடன், மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி … Read more

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைனில் சூதாட்டங்கள் தொடர்பான செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் தங்களது பணத்தை இழப்பதுடன் அல்லாமல், பணத்தை இழந்த விரக்தியில் உள்ளவர்களை தற்கொலைக்கும் இழுத்துச் செல்லுகிறது.     இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும் என அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா என … Read more

ராமன் கோயில் பூமி பூஜைக்கு: பிரதமர் வருகை

ராமன் கோயில் பூமி பூஜைக்கு: பிரதமர் வருகை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் அயோத்தி வருகை சுதந்திரதினம் ஆகியவற்றின் காரணமாக நேபாளத்தை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநில எல்லைப்பகுதிகளில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர். இந்தோ- நேபாள எல்லை காவல் படை உள்ளூர் நுண்ணறிவு பிரிவு மற்றும் நுண்ணறிவு முகாம்கள் எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  பேருந்து மற்றும் … Read more

அயோத்தியிலும் ஆகஸ்ட் 15லும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!!

அயோத்தியிலும் ஆகஸ்ட் 15லும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து சரத்தான 370ஐ நீக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த நாளை ஒட்டி தீவிரவாதிகள் தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயில் பூஜையும் அதே நாளில் நடக்க இருக்கிறது. நிர்மூலம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அதே நாளில் இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் அறிக்கையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் … Read more

செயற்கைக்கோளின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த கையாளும் புதிய யுத்தி?

செயற்கைக்கோளின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த கையாளும் புதிய யுத்தி?

பெய்தாவ் மூன்று என்னும் உலகளாவிய வழிகாட்டல் செயற்கைக்கோள் அமைப்பின் தொடக்க மாநாடு இன்று ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.சீனா ,ஆசியா, பசுபிக் மற்றும் உலகத்திற்கு சேவை வழங்குதல் என்று மூன்று குறிக்கோளுடன் கடந்த 26 ஆண்டுகளில் 55 செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது ஒரு பெரிய சாதனையாகும்.சீன விண்வெளி பயண துறைக்கும், அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கும் இந்த வெற்றி மாபெரும் பரிசாக இருக்கிறது. உலக பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அறிவியல் தொழில்நுட்பம் ஒரு … Read more