சீட்டிங் எம்எல்ஏ! திமுக சட்ட சபை உறுப்பினரை சீண்டிய அண்ணாமலை!

0
66

சென்ற மாதம் தேர்தல் ஆணையம் தமிழக சட்டசபை தேர்தலை அறிவித்தது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய அன்றே தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதேபோல பல முக்கிய தலைவர்கள் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அடுத்தடுத்து தங்களுடைய வேட்புமனுத்தாக்கல் முடித்துக் கொண்டு பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதேபோல தற்சமயம் நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும், வெற்றியானது வெகு தொலைவில் இருக்காது எந்த கட்சி வெற்றி பெற்றாலும் மிக நெருக்கமாக வந்து தான் வெற்றியை அவர்கள் அடைய முடியும் என்று சொல்கிறார்கள்.ஏனென்றால் அந்த அளவிற்கு போட்டியும் சரி, இரு கட்சிகளும் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளும் சரி, சரிக்கு சமமாக இருந்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.

கடந்த பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத காரணத்தால், இந்த முறை எப்படியேனும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று திமுக முழுமூச்சாக பணியாற்றி வருகிறது. அதோடு இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துவிடவேண்டும் என்று அதிமுகவும் முண்டியடித்துக்கொண்டு தேர்தல் வேலைகளில் இறங்கி இருக்கிறது.ஆஹ ஒன்றுக்கு ஒன்று சலைக்காமல் தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். ஆகவே தேர்தல் நெருங்க நெருங்க நீயா, நானா, என்ற போட்டி மிகக் கடுமையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் முடிவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், இன்று தமிழ்நாடு முழுக்க அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வேட்பு மனு தாக்கலை செய்துவருகிறார்கள்.இந்த சூழ்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் முருகன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து தாராபுரம் உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கின்றார்.

அதேபோல சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் நடிகை குஷ்பு தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கின்றார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நான் நிச்சயமாக இந்த தேர்தலில் வெற்றி அடைவேன் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட்டு சென்றார்.

அதேபோல அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிகள் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக போட்டியிடும் அண்ணாமலை தன்னுடைய வேட்புமனுத் தாக்கல் இன்று செய்தார். மனுவை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் செந்தில் பாலாஜி இங்கே இருக்கின்ற மக்களுக்கு சுமார் 3 சென்ட் இலவச மனைப்பட்டா வாங்கித் தருவதாக தெரிவித்து விட்டு வேறு ஒரு தொகுதியை தேடிச் சென்று விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.


இவரைப் போலத்தான் திமுகவில் இருக்கின்ற எல்லா வேட்பாளர்களும் இருப்பார்கள். ஆகவே எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் சுமார் 200 இடங்களில் அதிமுக தலைமையிலான நம்முடைய கூட்டணி வெற்றி அடையும் என்பது உறுதியாக தெரிகிறது என தெரிவித்திருக்கிறார் பாஜகவின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை.