தமிழக முழுவதும் இன்று…! பாஜக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு நடுக்கத்தில் திமுக…!

0
66

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும், அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் சார்பாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறவிருக்கிறது.

தலைநகர் சென்னையில் 7 பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. வட சென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதமிருப்பதற்காக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கே உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் தரப்பில் அனுமதி வழங்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

போக்குவரத்து பிரச்சனையின் காரணமாக, வட சென்னை, மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை, கிழக்கு, மேற்கு, தென் சென்னை, தென் சென்னை கிழக்கு, உள்ளிட்ட 7 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்துமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பாஜகவின் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டமருகே உண்ணாவிரதம் இருப்பதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர். இதனையடுத்து வள்ளுவர் கோட்டமருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று பாஜகவின் தலைமை அறிவித்திருக்கிறது.

அதனடிப்படையில் வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகும். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இந்த சூழ்நிலையில், மொத்த மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள், பாஜக சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்றும், சொல்லப்படுகிறது.