அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்!

0
73

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்!

தண்ணீர் அழற்சி என்பது அக்வாஜெனிக் யூர்டிகேரியா என்று அழைக்கப்படுகிறது. இந்த அழற்சி இருப்பவர்களுக்கு தண்ணீரை தொட்டவுடனேயே சருமம் சிவந்து போய் வடுக்கள் தோன்ற ஆரம்பித்து விடும்.

தண்ணீர் அழற்சி என்பது ஒரு அரிதான நிலை ஆகும். தண்ணீர் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் போது இந்த அழற்சி இருப்பது பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.பெரும்பாலும் பெண்கள் இந்த அழற்சியால் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி றார்கள். தண்ணீர் மட்டுமல்ல கண்ணீர், வியர்வை போன்ற நீர் ஆதாரங்கள் கூட எரிச்சலை உண்டாக்கலாம்.

தண்ணீர் அழற்சியால் ஏற்படும் சரும வடுக்கள் சில மி. மீ முதல் பல செ. மீ வரை தோன்றலாம். பெரும்பாலும் அக்வாஜெனிக் யூர்டிகேரியாவில் சரும வடுக்கள் பொதுவாக 1-3 மிமீ அளவு மட்டுமே இருக்கும். இந்த சரும வடுக்கள் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

இந்த அழற்சி ஒரு நபர் தண்ணீருடன் தொடர்பு கொண்ட 20-30 நிமிடங்களுக்குள் உருவாகலாம்.சரும புண்கள் எரிச்சல் உணர்வு சரும வீக்கம் தோல் சிவந்து போதல் அரிப்பு சிலர் மூச்சுத்திணறல் கழுத்து, கைகள் மற்றும் உடம்பில் சரும வடுக்கள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

சருமத்தின் மேற்பரப்பில் உள்ள ஒவ்வாமை பொருட்களை நீர் கரைக்கும் போது இத்தகைய அழற்சி தோன்றுகிறது. இது ஒவ்வாமை செல்களை தோலின் மேற்பரப்பில் உருவாக்கி விடுகிறது.இது சருமத்தின் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகளில் இருந்து நேரடியாக ஒவ்வாமை செல்களை எரிச்சலூட்டுகிறது.ஒவ்வாமை ஏற்படும் சமயங்களில் நம் நோயெதிர்ப்பு அமைப்பானது எதிர்த்து போராட ஹிஸ்டமைன்களை வெளியிடுகிறது. சோதனையின் போது, மருத்துவர் உங்கள் மேல் உடலில் 95°F (35°C) வெப்பநிலையில் நீரை தொடர்பு கொள்ளச் செய்வார்.

அக்வாஜெனிக் யூர்டிகேரியாவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை. உங்களுக்கு தண்ணீர் அழற்சி இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது.இருப்பினும் எப்பொழுதும் தண்ணீருடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது என்பது சாத்தியமற்றது

author avatar
CineDesk