மறைமுகமாக பாஜகவை தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

0
102

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் உருவ படம் திறப்பு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார், விழாவில் பாண்டியன் உருவப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர் நல்லக்கண்ணு திறந்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விழாவில் பாண்டியனுக்கு புகழஞ்சலி செலுத்தி ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார் பாண்டியன் என்றாலே தலைவராக பாண்டியன் எப்போதும் யாருக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பயப்படாத பாண்டியனாக தான் வாழ்ந்து மறைந்தார். சென்ற பிப்ரவரி மாதம் மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திமுகவுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடையே வெறும் நட்பு மட்டும் அல்ல நாம் ஒரே குடும்பம் அதுவும் சாதாரண குடும்பம் அல்ல கொள்கை குடும்பம் என்ற உணர்வில் தான் நான் அந்த மாநாட்டில் உரையாற்றி இருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு வீரமணி பேசும்போது பாண்டியன் படம் மட்டுமல்ல பாடம் என்று தெரிவித்தார் இந்த பாடத்தை தமிழக மக்கள் ஏற்கனவே கைப்பற்றி விட்டார்கள் இந்திய அளவில் இந்த பாடத்தை நாம் யாருக்கு புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு பெற்றிட வேண்டும் இந்த படத்திறப்பு விழாவில் எல்லோரும் உறுதி ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பாண்டியன் பேசும்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், நல்ல காலம் பிறக்க வேண்டும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும், என்றெல்லாம் எடுத்துரைத்தார். இன்று தமிழகத்தை பொறுத்தவரையில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இதைப் பார்க்க அவரை இல்லையே என்ற ஏக்கம் தான் என்னுடைய மனதை வாட்டி கொண்டு இருக்கிறது என கூறியிருக்கிறார் முதலமைச்சர்.

பொதுவுடமை இயக்கத்தின் தியாகத்திற்கு எடுத்துக்காட்டு ஜீவா அவரை நான் பார்த்ததில்லை, அவருடைய உரையை கேட்கவில்லை, ஜீவா எவ்வாறு பேசுவார் என்பதை கருணாநிதியை எங்களிடம் பேசிக் காட்டுவார். ஆகவே ஜீவாவை போன்று தமிழகம் முழுவதும் முழங்கி வந்தவர்தான் பாண்டியன் கருணாநிதி போன்று அரசியல் இலக்கியத்தையும் இணைத்து இரண்டிலும் பயணம் செய்தவர்.

திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும். ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்று பாண்டியன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிங்காரவேலர், பெரியார், ஜீவா, உள்ளிட்டோர் இணைந்து இருந்த காலம் போல ஏற்படவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது போன்ற உணர்வோடு தான் கருணாநிதி பாண்டியனுடன் நட்பு கொண்டிருந்தார், நாமும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறோம். அதனுடைய அடையாளம்தான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்தவர்களும், ஒரே மேடையில் ஒருசேர அமர்ந்து இருக்கின்றோம்.

நமக்குள் இருப்பது தேர்தல் உறவு மட்டுமல்ல, கொள்கையை உறவு என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சொல்லுவதைப் போல சுயமரியாதை, சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்திட நாம் எல்லோரும் சேர்ந்து நிச்சயமாக ஒற்றுமையுடன் செயல்படுவோம் அதுவே பாண்டியனுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும் என்று கூறியிருக்கிறார்.

இதில் பாடம் புகட்ட வேண்டியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஸ்டாலின் பேசியிருப்பது பாஜகவை குறிப்பிட்டு தான் என்று தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது போன்று மத்தியிலும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை சில நாட்களுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்தார்.

அதோடு தமிழகத்தை காப்பாற்றி விட்டீர்கள், இந்தியாவையும் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்சமயம் இவ்வாறு பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்து இருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது. அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய அரசியலில் கால் பதிக்க துடித்துக் கொண்டிருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது.