முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! 

0
123
#image_title

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!!

தற்போது சீரியல் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீரியலில் காட்டப்படும் கருத்துக்களும் கதைப்போக்குகளும் மிகவும் பிற்போக்குத்தனமாய் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளான ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் காலை முதல் இரவு வரை சீரியல்களே அதிகம் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. சீரியல்களை பார்ப்போர் எண்ணிக்கையும் முன்பே விட தற்போது அதிகரித்தே உள்ளது. ஆண்களும் இளைஞர்களும் கூட தற்போது சீரியல் பார்க்க தொடங்கியுள்ளனர். செல்போன் மூலமும், ஓடிடி இல்லை ஆப் மூலமும் சீரியல் பார்க்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

அப்படிப்பட்ட சீரியல்களில் அதாவது மெகா தொடர்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எப்படி இருக்கிறது அக்கருத்துக்கள் நம் சமூகத்திற்கு தேவையா? இல்லை தேவையற்றதா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

முன்புள்ள சீரியல்களில் மாமியார் மருமகள் சண்டை, குடும்ப பிரச்னைகள், குடும்ப உறவுமுறைக்குள் இருக்கும் சிக்கல்கள் மற்றுமே சீரியல்களின் கதைக்களமாக அமைந்தது. ஆனால் தற்போது வரும் சீரியல்கள் அனைத்தும் நெகட்டிவ் அதாவது தவறான கதாப்பாத்திரமே அதிகம் காட்டப்படுகிறது.

எப்படியென்றால் குடும்ப உறவுகளை சிதைக்கும் வகையில் இருக்கும் கதாபாத்திரங்கள், முதன்மை கதாபாத்திரங்களாகி அப்படியே நான்கு, ஐந்து வருடங்களை தாண்டியும் சீரியல்களை ஒளிபரப்பு செய்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

இதனை பார்க்கும் மக்களுக்கு, குடும்ப உறவுகள் பற்றிய தவறான புரிதல் ஏற்படுகிறது. அதே இரு மனைவிகள் கதை, கணவனுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு, ஊதாரியாக சுற்றும் குடும்பத் தலைவர், அம்மா-அப்பாவை ஏமாற்றும் இளைஞன், பல்வேறு பிரச்சனைகளை சகித்துக் கொண்டு புகுந்த வீட்டில் வாழும் மருமகள், கொடூர மாமியார் என இப்படியான கதாபாத்திரங்களை வைத்து பல சீரியல்கள் தங்கள் கதையை நிகர்த்திக் கொண்டு செல்கின்றன.

தற்போது வரை ஒளிபரப்பப்படும் சீரியல்கள் பெண் அடிமைத் தனத்தை பறைசாற்றுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.