Home Blog Page 294

உங்கள் கால் விரல் நகம் உடல் நிலையை புட்டு புட்டு வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

0

நமது கை,கால் நகங்களை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.நமது நகங்கள் கெரட்டின் என்ற கடின புரோட்டினால் ஆனவை.இந்த நகம் நமது உடலின் வெளிப்புறத்தில் இருக்கிறது.

நம் கை கால் விரல்களின் நுனியில் கவசம் போல் இயற்கையாக இந்த நகங்கள் அமைந்திருக்கிறது.நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான நகங்கள் வளர்வதில்லை.சிலருக்கு நகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.சிலருக்கு வேகமாக வளரக் கூடிய நகங்கள் இருக்கும்.நமது ஒவ்வொரு நகமும் மாத்திற்கு மூன்று மில்லி மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது.

நம் நகத்தை வைத்தே நமது உடல் ஆரோக்கிய நிலையை கண்டுபிடிக்க முடியும்.நம் நகங்களின் குறுக்கே அதிக பள்ளங்கள் இருந்தால் வயதாகிவிட்டது என்று அர்த்தம்.நகங்கள் அழுக்கு நிறத்தில் இருந்தால் அது பூஞ்சை தொற்று இருப்பதை உணர்த்துகிறது.

நகங்கள் கருப்பாக மாற ஊட்டச்சத்து குறைபாடு,பூஞ்சை தொற்று முக்கிய காரணமாகும்.நகங்களில் டிரைக்கோபைட்டன் ரூப்ரம் என்ற பூஞ்சை தொற்று ஏற்பட்டால் நகங்கள் கருப்பாக,சொத்தையாக மாறும்.நகச்சொத்தையை நகப்படை என்றும் அழைப்பார்கள்.

உங்கள் நகங்கள் வெளுத்து இருந்தால் அது நிமோனியா,சொரியாசிஸ் போன்ற பாதிப்புகளுக்கான அறிகுறியாக இருக்கலாம்.அதேபோல் உங்கள் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நுரையீரல் பாதிப்பை உணர்த்தும்.தைராய்டு பாதிப்பு,நீரிழிவு நோய்,சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் கை கால் விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

உங்கள் நகங்களின் நிறம் நீல நிறத்தில் இருந்தால் நுரையீரல் பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.நகங்களுக்கு நடுவே கருப்பு கோடுகள் தென்பட்டால் அது புற்றுநோய் பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.உங்கள் நகம் வளைந்திருந்தால் அது இரும்புச்சத்து குறைபாடு இருப்பதை குறிக்கும்.

இது தெரியுமா? ஊசி மருந்து இல்லாமல் நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்!!

0

நாம் தற்பொழுது பல்வேறு மருத்துவத்தை பின்பற்றி வருகின்றோம்.சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,அலோபதி,ஹோமியோபதி போன்ற வரிசையில் இயற்கை மருத்துவம் அதாவது நேச்சுரோபதியும் அடங்கும்.

இந்த இயற்கை மருத்துவத்தில் மருந்து,ஊசி,மாத்திரை எதுவும் இல்லாமல் வியாதிகளை குணப்படுத்துகின்றனர்.உடலில் இருக்கின்ற ஐந்து உறுப்புகளை வைத்து உடல் சமநிலையை சரி செய்கின்றனர்.

உடலில் நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தலாம்.இயற்கை மருத்துவத்தின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை இணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.மனம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக இயற்கை மருத்துவத்தை பின்பற்றலாம்.இயற்கை மருத்துவ சிகிச்சையின் மூலம் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.

எந்த ஒரு நோய் பாதிப்பையும் இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும்.நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இயற்கை மருத்துவம் உதவுகிறது.நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயற்கை மருத்துவத்தை பின்பற்றலாம்.

தற்பொழுது கொஞ்சம் தலைவலி வந்தாலே உடனே மாத்திரை வாங்கி போடும் மோசமான வழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.மருந்து,மாத்திரைகள் நம் உடல் நோய்களை குணப்படுத்தும் என்றாலும் இதை மட்டுமே நம்பி இருந்தால் நிச்சயம் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

அலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு பரிசோதனை,சிகிச்சை போன்றவை வழங்கப்படுகிறது.ஆனால் இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை இன்றி ஆரோக்கிய உணவுகள் மூலம் குணமடைய செய்கின்றனர்.

அதேபோல் நமது நாடியை வைத்து நமது உடலில் என்ன சுவை குறைவாக இருக்கிறது என்பதை கணித்து அதற்கு ஏற்ற இயற்கை சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.ஊசி,மருந்து,மாத்திரை இது எதுவும் இல்லாமல் நீங்கள் நோய்களை குணப்படுத்திக் கொள்ள நினைத்தால் நிச்சயம் நீங்கள் நேச்சுரோபதியை பின்பற்றலாம்.

வெயில் காலத்தில் நீங்கள் அதீத தலைவலியை அனுபவிக்க என்ன காரணம் தெரியுமா?

0

சம்மரில் சீசனில் உடல் நல பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.கோடை வெயில் அதிகரிப்பதன் காரணமாக உடலில் பல நோய்கள் உண்டாகிறது.சுட்டெரிக்கும் வெயிலால் தலைவலி,உடல் சோர்வு,நீரிழப்பு,மயக்கம் போன்ற பாதிப்புகளால் அவதியடைபவர்கள் ஏராளம்.

குறிப்பாக வெயில் காலத்தில் தலைவலி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.நீர்ச்சத்து குறைபாடு,மன அழுத்தம்,உடல் சோர்வு,தலைசூடு போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.நீரிழப்பால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்த உடலுக்கு தேவையான திரவத்தை பருக வேண்டும்.

மற்ற பருவ காலங்களைவிட வெயில் காலத்தில் தண்ணீர் தேவை அதிகமாகவே உள்ளது.அதிக வெயிலால் உடலில் இருந்து வியர்வை எளிதில் வெளியேறி நீரிழப்பு அதாவது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

நீரிழப்பால் உண்டாகும் தலைவலியை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.அதிகளவு சிறுநீர் கழித்தல்,உதடு மற்றும் நாக்கு வறண்டு போதல்,உடல் சோர்வு போன்றவை நீரிழப்பால் ஏற்படும் தலைவலியாகும்.

அதேபோல் மன அழுத்தத்தால் கடுமையான தலைவலி பாதிப்பை சந்திக்கக் கூடும்.தூக்கமின்மை,நீரிழப்பு,உடல் சோர்வு,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.இதன் காரணமாக தலைவலி பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்த தியானம்,யோகா போன்றவற்றை செய்யலாம்.

அதேபோல் கோடை காலத்தில் உடலில் பித்தம்,கபம்,வாதம் போன்றவை அதிகரிக்கிறது.இதன் காரணமாக தலைவலி பாதிப்பு ஏற்படலாம்.கோடை கால தலைவலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம்.

1)உடலில் நீரேற்றத்தை அதிகரிக்க இளநீர் குடிக்கலாம்.இளநீர் குடித்தால் உடலில் வெப்பம் தணியும்.

2)ரோஜா இதழை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவிட்டு குடித்தால் உடலில் பித்தம் குறையும்.

3)கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தலைவலி குணமாகும்.

4)புதினாவின் டீ போட்டு குடித்தால் தலைவலி பாதிப்பு நீங்கும்.சோம்பு பானத்தை பருகினால் தலைவலி நீங்கும்.

5)திரிபலா பொடியில் டீ செய்து குடித்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.திரிபலா பொடியை சாப்பிட்டால் உடல் சூடு,தலைவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை

0

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சில தினங்களுக்கு முன் பாமக தலைவராக நானே தொடருவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக பணியற்றுவார் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. அன்புமணி ராமதாஸ் அவர்களும் தொடர்ந்து மெளனம் காத்து வந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989-ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது இனக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது.

மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கள், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார்.

மருத்துவர் அய்யா அவர்கள் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அதே போல் மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும்.

மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன்… அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் சரித்திர படத்திற்கு கை கொடுக்கும் அந்த நிறுவனம்!… இப்பவாவது டேக் ஆப் ஆகுமா?..

0

சகலகலா வல்லவர் என திரைத்துறையில் அழைக்கப்படும் டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன். சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சின்ன வயது முதலே சினிமாவில் இருப்பதால் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாவற்றிலும் திறமை கொண்டவர் இவர். ஆனாலு,ம் ஷுட்டிங்கிற்கு சரியாக போகாமல் கெட்ட பெயர் எடுத்தார்.

திடீரென வந்து ஒரு படம் நடித்து ஹிட் கொடுப்பார். அதன்பின் சில தோல்விப்படங்களை கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார். இவரின் நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளியாகி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அதன்பின் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு சரித்திர படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது.

simbu
simbu

ஆனால், பட்ஜெட் காரணமாக ராஜ்கமல் பின் வாங்கிவிட்டது. அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. இந்த படம் ஜுன் மாதம் வெளியாகவுள்ளது. அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இது சிம்புவின் 49வது திரைப்படமாகும்.

அடுத்து சிம்புவின் 50 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை சிம்புவே தயாரிப்பதாக சொல்லப்பட்டாலும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள். இது சரித்திர கதையாகும். அடுத்து சிம்புவின் 51வது படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு படம் வெளியாகி 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து 3 படங்களின் அறிவிப்பை சிம்பு வெளியிட்டிருக்கிறார். இதனால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்!. தமிழிசை வாழ்த்து…

0

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜக தலைவருக்கான தேர்தலில் இவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஜனநாயகப்படி தேர்தல் வைத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக சொல்லிக்கொண்டாலும் நயினார் நாகேந்திரன்தான் தமிழக பாஜக தலைவர் என அமித்ஷா முடிவு செய்துவிட்டார். அதனால்தான் அவரை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றி வந்தார். திமுகவின் ஊழல்கள் பற்றி தொடர்ந்து பேசி வந்தார். எதிர்கட்சி தலைவர் இவரா இல்லை பழனிச்சாமியா என்கிற தோற்றத்தை உருவாக்கும் அளவுக்கு அண்ணாமலையின் செயல்பாடுகள் இருந்தது. ஆனால், அதிமுக தலைவர்கள் பற்றி அவதூறாக பேசி பழனிச்சாமியின் கோபத்திற்கு ஆளானார். அவரால்தான் அதிமுக – பாஜக கூட்டணியே உடைந்து போனது.

அதோடு, மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி சேர்வதில் அண்ணாமலைக்கு விருப்பமே இல்லை. இதை அவர் அமித்ஷாவிடம் சொல்லியும் ஒன்றும் நடக்கவில்லை. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என பழனிச்சாமியும் அமித்ஷாவிடம் சொன்னதை அவரும் ஏற்றுகொண்டார். இப்போது நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக மாறியிருக்கிறார்.

இந்நிலையில், இது தொடர்பான விழாவில் பேசிய தமிழிசை சவுந்தர்ராஜன் ‘நெல்லையில் இருந்து திமுகவிற்கு ஒரு தொல்லை புறப்பட்டு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக கூட்டணிக்கு நயினார் நாகேந்திரன் சிம்ம சொப்பனமாக இருக்கப்போகிறார். தாமரை மலர வேண்டும் என்கிற நமது சொப்பனத்தையும் அவர் நிறைவேற்றப்போகிறர்’ என பேசியிருக்கிறார்.

இறுதிக்கட்டத்தில் ஜனநாயகன்!.. புலி பாய்ச்சலாக வெளியே வருவாரா தளபதி?…

0

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

முதலில் இப்படம் தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொன்னார்கள். அந்த படத்தில் ஸ்ரீலீலா நடித்த வேடத்தில்தான் தமிழில் விஜய் நடிக்கிறார் என்றார்கள். ஆனால், வெளியான புதிய போஸ்டர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல காட்சிகள் இருந்தது. மேலும், இது அரசியல் தொடரபான கதை எனவும் சொல்லப்பட்டது. மேலும். கமல் தனக்காக எழுதிய தலைவன் இருக்கிறான் படக்கதையை விஜய்க்காக கொடுத்துவிட்டார் என்றும் சொன்னார்கள்.

ஏனெனில், கமலுன் ஹெச்.வினோத்தும் இணைந்து ஒரு படம் உருவாகவிருந்தது. ஒரு வருடத்திற்கு மேல் இப்படத்தின் வேலைகள் நடந்து வந்தது. கமல் ஏற்கனவே எழுதிய ‘தலைவன் இருக்கிறான்’ கதையைத்தான் படமாக எடுக்கவிருந்தனர். ஆனால், கமல் என்ன நினைத்தாரே ‘நீங்கள் வேறு படத்தை இயக்கிவிட்டு வாருங்கள். நம்முடைய படம் தாமதமாகும்’ என ஹெச்.வினோத்திடம் சொல்லிவிட்டார். அதன்பின்னர்தான் விஜயிடம் கதை சொல்லி ஜனநாயகன் படம் டேக் ஆப் ஆனது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்தில் முடியவுள்ளது.

படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் ஜனவரி மாதம்தான் என்பதால் மற்ற பணிகளுக்கு 6 மாதங்கள் இருக்கிறது. எனவே, போஸ்ட் புரடெக்சன் பணிகளை வினோத் நேரமெடுத்தே செய்வார் என்கிறார்கள். அதோடு, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த விஜயின் அரசியல் பணிகள் வேகமெடுக்கும் என்கிறர்கள்.

ரூ.20 லட்சம் வரை எளிமையான முறையில் கடன் வசதி!! எந்த ஆவணமும் தேவையில்லை!!

0

மத்திய அரசானது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து வர கூடிய நிலையில், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது நிதி உதவி பெறாத சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்களுக்கு கடன்களை வழங்கி அவர்களுடைய வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாகும்.

இவற்றை மத்திய அரசு 4 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது. அவை பின்வருமாறு :-

✓ ஷிஷு – இந்த பிரிவின் மூலம் சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்கள் 50,000 ரூபாய் வரை கடன் தொகை பெற முடியும்

✓ கிஷோர் – இதன் மூலம் 50,000 முதல் 5 லட்சம் வரையிலான கடனை சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்கள் பெற முடியும்.

✓ தருண் – இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் தொகையாக சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

✓ தருண் பிளஸ் – இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை நுண் மற்றும் சிறு தொழிலாளர்களால் கடன் தொகை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

குறிப்பாக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய கடன்கள் விவசாயம் அல்லாத கார்ப்பரேட் அல்லாத தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த கடன் தொகையானது எந்தவித அடமான பத்திரமும் இல்லாமல் தொழில்முனைவோர்களுக்காக பெரிய ஆதரவை வழங்க வேண்டும் என திட்டமிடப்பட்டு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கும் முறை :-

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் பொது துறை வங்கிகள் தனியார் வங்கிகள் வணிக வங்கிகள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் பொழுது எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள் :-

✓ தொழில் திட்டம்
✓ ஆதார் அட்டை
✓ வாக்காளர் அடையாள அட்டை
✓ இருப்பிடச் சான்றிதழ்
✓ வருமானவரி சான்றிதழ்

அதிமுகவை முதல் முறையாக ரோஸ்ட் செய்த விஜய்.. 2026 யில் கட்டாயம் இது உறுதி!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த உடன் அதன் கொள்கைகளை வைத்து அதிமுக – வுடன்  கூட்டு என்று கூறி வந்தனர். ஆனால் விஜய் அதற்கு முழுவதுமாக மறுப்பு தெரிவித்து விட்டார். தற்போது மீண்டும் பாஜக மற்றும் அதிமுக இணைந்துள்ளது. இது ரீதியாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

“குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.

ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன? மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதலமைச்சரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும்.

ஆனால் இங்கோ ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும்.

இது போன்ற பல செயல்பாடுகள், பாஜக – திமுக மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன. திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அஇஅதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.

பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே மூன்றுமுறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.

2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், ‘நாங்கள்தான் திமுகவுக்கு எதிரான ஒரே அணி’ என்று பாஜகவும், ‘தாங்கள்தான் பாஜகவுக்கு எதிரான அணி’ என்று திமுகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர்.

இனி, திமுகவும் பாஜகவும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது. தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர்.

https://x.com/TVKVijayHQ/status/1910947580470579282/photo/1

அதை நிரூபிக்கும் விதமாக, தங்கள் மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவையும் ஏற்கெனவே எடுத்துவிட்டனர். நாம், ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவிற்கும் இடையே தான்.

மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், வீறுநடை போடுகின்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில் உண்மையான ஒரு மாற்றத்தை வேண்டி விரும்பி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தாய்மார்களும் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள்.

எனவே, பிளவுவாத பாஜக மற்றும் மக்கள் விரோத திமுக.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி.

அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்”

சூர்யா பட விழாவில் ரஜினி?!. மாஸ்டர் கெட்ச் போடும் இயக்குனர்!…

0

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கன்னிமா பாடல் லிரிக் வீடீயோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சந்தோஷ நாராயனணே இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இப்பாடலை புரமோஷன் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டார்கள். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. வருகிற 18ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருப்பதாக சொல்லப்படுகிறது.

retro
retro

இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியவர். எனவே, அவருக்காகவும், சூர்யாவுக்காகவும் ரஜினி இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஒருபக்கம், ரெட்ரோ படத்தில் 3வது பாடலை இன்று படக்குழு வெளியிட்டிருக்கிறது. தி ஒன் என்கிற தலைப்போடு இந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணனும், சித் ஸ்ரீராமும் இப்பாடலை இணைந்து பாடியிருக்கிறார்கள்.