Home Blog Page 369

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் எப்படி இருக்கும்? Heat Stroke பாதிப்பு வராமல் இருக்க முதலில் இதை செய்யுங்கள்!!

0

வெயில் கால நோய்களில் ஆபத்தானவை என்றால் ஹீட் ஸ்டோக்கை சொல்லலாம்.உடல் சூடு அதிகமானால் இந்த ஹீட் ஸ்டோக் பாதிப்பு ஏற்படும்.ஹீட் ஸ்டோக்,ஐ ஸ்டோக் போன்ற பாதிப்புகள் அதிக வெப்ப அலைகளால் உருவாகிறது.

தற்பொழுது பங்குனி வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இன்னும் சில தினங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி எடுக்க போகிறது.இதனால் அனல் காற்று வீசக் கூடும்.அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்படுகிறது.இதன் காரணமாக சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.

உடல் சூடு அதிகமானால் நீர்ச்சத்து குறைந்து ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும்.இந்த ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டால் வாந்தி,மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் வலி ஏற்படும்.ஹீட் ஸ்ட்ரோக்கை அலட்சியமாக கருதி உரிய சிகிச்சை எடுக்கத் தவறினால் உயிரே போய்விடும்.எனவே இந்த வெயில் காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் உடல் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக் எதனால் வருகிறது?

**கடுமையான வெயில் தாக்கத்தால் உடல் சூடாகி ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுகிறது.

**உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதாவது அதிக நீரிழப்பு ஏற்பட்டால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும்.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு வராமல் இருக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்:

**மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

**இளநீர்,நுங்கு,வெள்ளரி ஜூஸ்,மோர் போன்ற குளிர்ச்சி நிறைந்த இயற்கை பானங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

**வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.முடிந்தவரை வெயில் தாக்கம் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

**தினமும் இருமுறை குளிப்பதால் உடல் சூடாகாமல் இருக்கும்.டீ,காபி போன்ற சூடான பானங்களை அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி குளிப்பதற்கு சோப் யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

0

Bath Without Soap Benefits: நம் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும்,வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தவும் குளியல் அவசியமானதாக உள்ளது.சோப் பயன்படுத்தி குளித்தால் உடலில் வெளியேறும் அதிகப்படியான வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

சோப்பில் செயற்கை வாசனை அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அவற்றை பயன்படுத்தி குளிக்கும் பொழுது உடல் மணம் வீசுகிறது.இருப்பினும் சோப் கெமிக்கல் பொருள் என்பதை அதை பயன்படுவதை தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சோப் இல்லாமல் குளிப்பதன் மூலம் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.சிலர் சருமத்திற்கு சோப் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.சோப் பயன்படுத்தாமல் குளிப்பதால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பாதுகாக்கப்படுகிறது.சரும அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

வறண்ட சருமப் பிரச்சனை இருப்பவர்கள் சோப் இல்லாமல் குளிப்பதால் சருமம் மென்மையாக மாறும்.தோல் அலர்ஜி காரணமாக சிலருக்கு சோப் பயன்படுத்துவது அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.சரும அலர்ஜி ஏற்படாமல் இருக்க சோப் இன்றி குளிக்கலாம்.

சோப் பயன்படுத்தி குளித்தால் சருமத்தில் pH அளவில் பாதிப்பு ஏற்படும்.அதுவே சோப் பயன்படுத்தாமல் குளிப்பதால் pH அளவு மாறாமல் இருக்கும்.இதனால் சுருக்கம்,சரும வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

சோப் பயன்படுத்தாமல் குளிப்பதால் சரும ஆரோக்கியம் வயதான காலத்திலும் நன்றாக இருக்கும்.சோப் பயன்படுத்தாமல் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.நீண்ட வருடங்களுக்கு இளமை பொலிவுடன் இருக்க சோப் பயன்படுத்தி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

சோப் இல்லாமல் இயற்கை பொருளை பொடித்து சருமத்திற்கு அப்ளை செய்து குளிக்கலாம்.ரோஜா பூ,மஞ்சள் தூள்,சந்தனம்,வேப்பிலை,கற்றாழை போன்ற பொருட்களை பொடித்து இயற்கை குளியல் பொடியாக பயன்படுத்தி வந்தால் சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.

சோப் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாதவர்கள் தேங்காய் எண்ணெய்,ஆட்டுப்பால்,தேங்காய் பால்,வேப்பிலை,கற்றாழை,மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் சோப்பை வாங்கி பயன்படுத்தலாம்.கெமிக்கல் சோப்பை காட்டிலும் இதுபோன்ற சோப் சருமத்திற்கு நன்மை தரும்.

இனி குழந்தைகளுக்கு இந்த நொறுக்கு தீனி கொடுங்க!! டாக்டர் பரிந்துரைக்கும் ஹெல்தி ஸ்நாக்ஸ்!!

0

நொறுக்கு தீனியை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தீனி மிகவும் சுவையாக இருப்பதால் அவற்றிற்கு அனைவரும் அடிமையாகி வருகின்றனர்.தற்பொழுது பல இனிப்பு,புளிப்பு,கார்ப்பு போன்ற சுவைகளில் வெரைட்டியான நொறுக்கு தீனி விற்பனையாகி வருகிறது.

சிலர் தினமும் நொறுக்கு தீனியை உணவாக சாப்பிடுகின்றனர்.குழந்தைகள் தினமும் ஏதேனும் ஒரு வகை நொறுக்கு தீனி உட்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.இப்படி நொறுக்கு தீனிக்கு அடிமையாகி இருந்தால் நிச்சயம் ஆயுட்காலம் குறைந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆசைக்காக எப்பொழுதாவது நொறுக்கு தீனி சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது.ஆனால் தினமும் நொறுக்கு தீனி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.கடையில் விற்கப்படும் நொறுக்கு தீனியால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைப்பதில்லை.

குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிக்கு பதில் வீட்டில் ஆரோக்கியம் தரும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.குழந்தைகளை கவரும் ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் ஐட்டம்ஸ் செய்து தரலாம்.மூக்கு சுண்டல்,பட்டாணி சுண்டல்,வெள்ளை சுண்டல்,தட்டை பயறு,பச்சை பயறு போன்றவற்றை வேகவைத்து தாளித்து தேங்காய் தூவி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

வேர்க்கடலை,மக்காச்சோளம் போன்றவற்றை வேகவைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வேர்க்கடலை,கடலை பருப்பு,பட்டாணி போன்றவற்றை பொரித்து சாப்பிடக் கொடுக்கலாம்.அரிசிப்பொரியில் பொட்டுக்கடலை,வேர்க்கடலை,பட்டாணி ஆகியவற்றை கலந்து சாப்பிடக் கொடுக்கலாம்.

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களுக்கு பதில் இளநீர்,நுங்கு போன்றவற்றை கொடுக்கலாம்.ஆரஞ்சு சாறு,எலுமிச்சை சாறு என்று பழங்களை கொண்டு நேச்சுரல் ஜூஸ் தயாரித்து பருகலாம்.

கடலை மிட்டாய்,எள் மிட்டாய்,பொட்டுக்கடலை மிட்டாய்,தேங்காய் மிட்டாய் போன்றவற்றை செய்து சாப்பிடக் கொடுக்கலாம்.மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை வேகவைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.மக்காசோளத்தை வேகவைத்து உப்பு,காரம்,எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்தால் குழ்நதைகள் சுவைத்து சாப்பிடுவார்கள்.முளைக்காட்டிய பயறை கொண்டு சால்ட் செய்து கொடுக்கலாம்.கடைகளில் விற்கும் நொறுக்கு தீனிகளை தவிர்த்துவிட்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பெண்கள் அனுபவிக்கும் மார்பக வலி!! காரணங்களும் அதற்கான தீர்வுகளும் இதோ!!

0

மார்பு வலி பாதிப்பை பெரும்பாலான பெண்கள் சந்திக்கின்றனர்.மார்பு பகுதியில் தாங்க முடியாத வலி,மார்பு வீக்கம்,முலைக்காம்பு பகுதியில் சிவந்து போதல்,இரத்தம் மற்றும் தண்ணீர் போன்ற திரவம் வெளியேறுதல் என்று பெண்கள் பல்வேறு தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர்.பெண்களுக்கு மார்புவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

பெண்களுக்கு மார்பக வலி வர காரணங்கள்:

1)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
2)கர்ப்பகாலம்
3)மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்
4)மருந்துகள் விளைவு
5)மார்பு அழுத்தம்
6)தாய்ப்பால்
7)இறுக்கமான உள்ளாடை அணிதல்

மார்பு வலி அறிகுறிகள:

1)மார்பில் வீக்கம்
2)மார்பில் கனத்தன்மை
3)மார்பில் கூர்மையான வலி
4)மார்பு குத்தல்
5)மார்பு பகுதியில் எரிச்சல் உணர்வு
6)முலைக்காம்பு வீக்கம்
7)முலைக்காம்பில் இரத்தம் கசிதல்
8)முலைக்காம்பில் துர்நாற்ற திரவம் வெளியேறுதல்

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி தாமதமாதல்,தாய்ப்பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பாதிப்பால் மார்பு பகுதியில் வலி மற்றும் வீக்கம் உண்டாகிறது.

சில பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன் மார்பு பகுதியில் வலி உணர்வு ஏற்படும்.கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மார்பு வீக்கம் ஏற்படும்.குழந்தை பெற்ற தாய்மார்கள் பாலூட்டுவதால் மார்பு வலி ஏற்படுகிறது.

பெண்களுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படும் பொழுது மார்பு வலி பிரச்சனை ஏற்படும்.மார்பகத்தில் அடிபடுதல்,காயங்கள் உண்டதால் போன்ற காரணங்களால் மார்பு வலி வரும்.

எடுத்துக் கொள்ளும் மருந்தின் பக்க விளைவால் மார்பு பகுதியில் கடிமான வலி ஏற்படலாம்.மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும்.மார்பு அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு மார்பு வலி வருவது இயல்பானது.

மார்பு வலி குறைவாகவோ அல்லது வலி ஆதிகமாகவோ இருந்தால் நீங்கள் அலட்சியம் செய்யக் கூடாது.நேரத்தை கடத்தாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.

அதிசயம்.. சிகிச்சை இன்றி குணமாகும் புற்றுநோய்கள்!! எந்தவகை கேன்சர் என்று செக் பண்ணிக்கோங்க!!

0

உடலிலுள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளை புற்றுநோய் செல்கள் சேதமைடய செய்கிறது.இந்த புற்றுநோய் பாதிப்பு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய் பாதிப்பு இல்லை.புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது.அவை உடலில் எந்த உறுப்பில் உருவாகிறது என்பதை பொறுத்து மாறுகிறது.

உதாரணத்திற்கு புற்றுநோய் செல்கள் நுரையீரலில் உருவானால் அவை நுரையீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.புற்றுநோயில் கல்லீரல் புற்றுநோய்,தொண்டை புற்றுநோய்,இரத்தப்புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,குடல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,மூளை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது.

புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் அபாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம்.

புற்றுநோய்க்கான பொது அறிகுறிகள்:

1)தீராத காய்ச்சல்
2)உடலில் அதிகப்படியான சோர்வு
3)அதிகப்படியான எடை இழப்பு
4)உணவு விழுங்குவதில் கடும் சிரமம்
5)கடுமையான வயிற்று வலி
6)சரும மாற்றம்
7)இடைவிடாத இருமல்

புற்றுநோய் காரணங்கள்:

1)அதிகப்படியான மது மற்றும் புகைப்பழக்கம்
2)மோசமான உணவுமுறை
3)உடல் நலக் கோளாறு

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் அதன் அறிகுறிகள் தென்படாது.அனைத்து புற்றுநோய்களும் பரம்பரைத் தன்மை கொண்டிருப்பதில்லை.சில வகை புற்றுநோய்களை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம்.

சிலவகை புற்றுநோய்கள் சிகிச்சை எதுவும் இன்றி தானாக குணமாகும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.தோல் புற்றுநோய்,கர்ப்பகால புற்றுநோய்,நியூரோபிளாஸ்டோமா என்ற குழந்தை பருவ புற்றுநோய் போன்ற சிலவகை புற்றுநோய்கள் உருவாகி தானாக மறைந்திருக்கிறது என்ற உண்மை நிகழ்வுகள் மருத்துவ வரலாற்றில் நடந்திருக்கிறது.

இருப்பினும் அனைவருக்கும் இதுபோன்ற புற்றுநோய் பாதிப்பு இயற்கையாக குணமாக என்றால் கேள்விக்குறி தான்.இன்றுவரை புற்றுநோய்க்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கிறது.இதுபோன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அவை குணமாகும் என்று காத்திருக்கலாம் சம்மந்தப்பட்ட மருத்துவரை அணுகி உடனடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

வேலுமணி கைவசமுள்ள பக்கா திட்டம்: 2026 தேர்தலுக்கு சூப்பர் ஸ்கெட்ச் – அதிமுகவினருக்கு வார்னிங்!

0

அ.தி.மு.க. சார்பில் கோவை மாநகர், வடக்கு மற்றும் புறநகர் தெற்கு மாவட்டங்களின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.

அவர் கூறியதாவது: “அடுத்த சட்டசபை தேர்தலுக்கு வெறும் சில மாதங்களே உள்ளன. எனவே, ஒவ்வொரு வாக்காளரின் பெயர் சரியாக வாக்காளர் பட்டியலில் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது, தி.மு.க. அரசு, அ.தி.மு.க. ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அ.தி.மு.க.வின் ஓட்டுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது என்ற புகார்கள் வருகின்றன. மேலும், இறந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி, போலி ஓட்டுகள் போடவும் முயற்சி செய்யப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இது தேர்தல் முறைகேடாகும். இதை தடுக்க, அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, தி.மு.க. அரசு எந்த ஒரு பயனுள்ள நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்கள் தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு மாற்றாக, நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறோம். அந்த சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து, இப்போதே வாக்குகளை கோர தொடங்குங்கள்.

மேலும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவோம். தற்போது, போலீசார் பூத் கமிட்டிகளில் உள்ளோர் விபரங்களை சேகரிக்கிறார்கள். அவர்கள் வேறு நோக்கத்துடன் அதைச் செய்கிறார்கள். எனவே, எந்த ஒரு அ.தி.மு.க. தொண்டரும், அவர்களுக்குத் தேவையற்ற தகவல்களை வழங்க வேண்டாம். கட்சியின் தகவல் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட மற்றும் பகுதி தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பூத் நிர்வாகிகள், மற்றும் பல்வேறு நிலைப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

OTT தளங்களில் ஆபாசமான படங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை 

0

OTT தளங்களில் ஆபாசமான படங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை

OTT தளங்களில் வெளியாகும் ஆபாசமான படங்கள் மற்றும் ஆபாசமான படைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

OTT பிளாட்ஃபார்ம்களில் IP அட்ரஸ் மாற்றி அல்லது நிகழ்ச்சியின் பெயரை மாற்றி ஆபாசமான படங்கள் மற்றும் ஆபாசமான காட்சிகளை பகிர்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றக் குழுவானது அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிஜேபி எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மீண்டும் மீண்டும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை வழக்கும் வகையில் சட்டங்களை உருவாக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தை விரும்புகிறது.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த அதன் அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆபாசமான மற்றும் சில நேரங்களில் ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடும் 18 OTT தளங்களைத் தடுப்பது மற்றும் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குழு தெரிவித்துள்ளது.

இதில் பத்தொன்பது இணையதளங்கள், 10 ஆப்ஸ் (கூகுள் பிளேயில் ஏழு மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மற்றவை) மற்றும் இந்த தளங்களுடன் தொடர்புடைய 57 சமூக ஊடக கணக்குகள் பொது மக்கள் பார்க்க முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் குழுவிடம் தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தின் பகுதி III (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 OTT இயங்குதளங்களைக் கையாள்கிறது, மேலும் இது போன்ற காட்சிகளுக்கு  ‘A’ மதிப்பீட்டைக் வழங்கி குழந்தைகள் அதை பார்க்காத வகையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அமைச்சகத்தால் ஏற்கனவே தடுக்கப்பட்ட 18 OTT, 19 இணையதளங்கள் மற்றும் 10 ஆப்ஸ் ஆகியவற்றில் இருந்த காட்சிகள் சமூக ஊடகங்களிலும் டெலிகிராம் சேனல் போன்ற பிற ஊடக தளங்களிலும் எளிதாகக் கிடைக்கின்றனவா என்றும், அது நடந்தால், அதைச் சமாளிப்பதற்கான திட்டத்தை வழங்க வேண்டுமா என்றும் இந்த குழு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பு போதுமானதா அல்லது சமீபத்திய தொழில்நுட்பங்களின் பின்னணியில் இதைக் கையாள்வதற்கு இன்னும் கடுமையான சட்டங்கள் தேவையா என்றும் அது கேட்டுள்ளது.

இது தொடர்பாக மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு ஒருவித தடுப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் குழு அமைச்சகத்திற்கு “ஆலோசனை” வழங்கியது.

“செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் நிரல்களின் பெயரை மாற்றுதல், பரவல் வழிமுறைகளை மாற்றுதல் மற்றும் ஐபி முகவரியை மாற்றுதல் போன்ற போர்வையில் OTT இயங்குதளங்கள் அதே தவறைச் செய்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ளவும் குழு விரும்புகிறது” என்று அறிக்கை கூறுகிறது.

சமூக, டிஜிட்டல் மற்றும் மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைக் கையாள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒளிப்பதிவு (திருத்தம்) சட்டம், 2023 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் வகையில் “தொடர்ச்சியான சட்டத்தை மீறுபவர்கள்” சேனல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பல கட்சி குழு அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.

திமுகவை கைவிடுகிறதா கம்யூனிஸ்ட்? 2014 பாணிக்கு திரும்பும் தமிழக அரசியல்: அடுத்தது என்ன?

0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு, கட்சியின் எதிர்கால உத்திகள் மற்றும் தேசிய அரசியல் குறித்து முக்கியமான முடிவுகளை எடுக்கும் ஒரு முக்கிய விழாவாக அமையும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை எதிர்த்து எந்த வகையான போராட்ட உத்திகளை பயன்படுத்தலாம், எதிர்வரும் தேர்தல்களில் இடதுசாரிகளின் தனித்துவத்தை எப்படி மேலும் வலுப்படுத்தலாம் என்பன உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

மேலும், மாநில அரசுகளின் உரிமைகள் குறித்தும், அனைத்து மாநிலங்களிலும் கட்சியை எப்படி வலுவாக்குவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக இருந்த சீதாராம் யெச்சூரி காலமானதால், கட்சியின் தேசிய தலைமைப் பொறுப்பை தற்போதைக்கு இடைக்கால பொதுச்செயலராக பிரகாஷ் காரத் மேற்கொண்டுள்ளார். மதுரை மாநாட்டில் புதிய பொதுச்செயலர் தேர்வு செய்யப்படுவார். இந்த பதவிக்கு கேரளாவைச் சேர்ந்த மூத்த தலைவர் எம்.ஏ.பேபியின் பெயர் பரிசீலிக்கப்படுகிறது. இவர் முன்னதாக கேரள அரசில் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சு. வெங்கடேசனுக்கும் ஒரு முக்கியமான கட்சி பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவருக்கு எதிராக உள்ள கட்சிக்குள் சில குற்றச்சாட்டுகள், அவருடைய உயர்வு குறித்த கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் எந்த கூட்டணியில் சேர வேண்டும் என்பதையும் மாநாட்டில் தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க. – இடதுசாரி உறவு சமீபத்தில் சிறிது தளர்ந்திருப்பதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தொடர்ந்து இணைவார்களா, அல்லது புதிய கூட்டணிகள் உருவாகுமா என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் தலைமையிலான புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதா, அல்லது அ.தி.மு.க.வுடன் இணைவார்களா என்பது மாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்பட உள்ளது.

இதுபோன்ற கட்சியியல் மாற்றங்கள் முன்பும் நிகழ்ந்துள்ளன. 2004 பொதுத்தேர்தலில், இடதுசாரி கட்சிகள் தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், 2009 மற்றும் 2014 தேர்தல்களில் சில இடங்களில் கூட்டணி பிரிந்தது. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும், சில இடங்களில் இடதுசாரி கட்சிகளுக்கு பெரும் தாக்கம் ஏற்படவில்லை. இதனால், இந்த ஆண்டு கூட்டணி முடிவுகள் கட்சியின் எதிர்காலத்திற்கு முக்கியமாக பார்க்கப்படுகின்றன. மதுரை மாநாடு அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைய வாய்ப்பு உள்ளது.

செல்போன் சார்ஜ் போடும்போது உஷார்..!! பரிதாபமாக உயிரிழந்த 9ஆம் வகுப்பு மாணவி..!! சென்னையில் சோகம்..!! நடந்தது என்ன..?

0

சென்னையில் ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 14 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் செல்போனை சார்ஜ் போடும்போது சில தவறுகளை செய்கின்றனர். இதனால், பல விபரீத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அதுவும், இரவு நேரத்தில் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு  தூங்குவதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதேபோல், இன்னும் சிலர் சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனில் பேசுகின்றனர். இதனால், ஃபோன் சில சமயம் வெடித்து உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் தான், தற்போது சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த எர்ணாவூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முகுந்தன். இவரது மூத்த மகள் அனிதா (14), அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர், சனிக்கிழமை மாலை ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

இதனைப் பார்த்த பெற்றோர், அதிர்ச்சி அடைந்து உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எண்ணூர் காவல்துறையினர், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’இனி எங்கும் அலைய வேண்டியதில்லை’..!! வீட்டிலிருந்தபடியே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

0

வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பட்டா என்பது சொந்த வீடு அல்லது நிலம் வைத்திருப்போருக்கான முக்கிய ஆவணமாகும். இந்த பட்டாவை வருவாய்த்துறை வழங்குகிறது. மேலும், இந்த பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்பெல்லாம் பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று நினைத்தால், இ – சேவை மையத்தையோ அல்லது தாலுகா அலுவலகத்தையோ நாட வேண்டும்.

ஆனால், தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் செய்ய முடியும். இதற்காக www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்றதும் முதலில் உங்கள் பெயர், மொபைல் எண், இ – மெயில் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து, உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் மற்றும் சப்-டிவிஷன் நம்பரை உள்ளிட வ்ணேடும். மேலும், இந்த நிலம் உங்களுடைய சொந்த நிலம் தான் என்பதற்கு சான்றாக கிரைய பத்திரம் போன்ற ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

கடைசியாக, உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு 60 ரூபாயும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் செய்தால் 460 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வளவுதான். இதையடுத்து, உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்ததாக விஏஓ, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.