சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5785

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

0

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுகவினர் இடையே பதவிக்கான மோதல் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சியில் சுயேட்சையாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களை திமுகவினர் திட்டமிட்டு கடத்திச் சென்றதாக அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

அங்குள்ள ஒட்டுமொத்த 19 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்தில் 9 இடங்களை திமுக கூட்டணியும், 6 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர் தேவை என்கிற பட்சத்தில், இரு கட்சியினரும் மீதமுள்ள 4 சுயேட்சை உறுப்பினர்களிடமும் தனக்கு சாதகமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த சுயேட்சை கவுன்சிலர்களை நிகழ்ச்சி முடிந்ததும் திமுகவினர் தனி வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சி செய்தனர். இதைப் பார்த்த அதிமுகவினர் வாகனத்தை தடுத்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தடையை மீறி வாகனம் சென்றுவிட்ட காரணத்தால் சுயேட்சை வேட்பாளர்கள் கடத்தப்பட்டதாக கூறி அதிமுகவினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோன்று கரூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி பகுதியிலும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு மோதல்கள் நடந்துள்ளது.

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

0

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தான்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்து அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த விவகாரம் நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் மேலும் ஒரு சம்பவம் கொங்கு மண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி இவர் நேற்று காலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.பதறி போன பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிறுமி வயிற்றை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கதிரேசன் (வயது 23) என்பவன் தன்னை கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறினார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

சாமானியர்களை கலங்கடிக்கும் தங்கம் விலை?

0

அமெரிக்கா, ஈரான் பரபரப்பு அதிகரித்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கச்சா எண்ணையில் முதலீட்டை குறைத்து தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளனர் இதனால் இன்றைய தங்கத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது இதனால் சாமானிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிஉள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:

ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 64 ரூபாய் அதிகரித்து 3896 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 512 ரூபாய் அதிகரித்து பவுன் ஒன்றுக்கு 31168ரூபாயாகவும் உள்ளது.

அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 4088 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 40880 ஆகவும் உள்ளது.வெள்ளியின் விலையைபொறுத்தவரை கிராம்க்கு அதிகரித்து ரூபாய் 52.20ஆகவும், 1கிலோ ரூபாய் 52200க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

மனைவியுடன் பேச்சு! மரியாதை போச்சு! சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த கணவன்?

0

மனைவியுடன் பேச்சு! மரியாதை போச்சு! சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த கணவன்?

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தனது மனைவியுடன் சப்-இன்ஸ்பெக்டர் அடிக்கடி பேசி வருவதாகவும் எதிர்த்து கேள்விகேட்டதால் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனன் ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் “ராயலா நகர் காவல் நிலையத்தில்
சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி பேசி வருகிறார். நேற்று சாலையில் சென்ற போது தனது மனைவியும் சப்-இன்ஸ்பெக்டரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.

இந்நிலையில், ராஜேஷ் வீட்டிற்கு சென்று தனது மனைவியுடன் இருந்த புகைப்படத்துடன் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்டபோது ராஜேஷ் என்னை கடுமையாக தாக்கினார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தரப்பில் இது உண்மையல்ல என்றும் தன் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாக புகார் அளிக்கப்பட்டது. இருவரின் புகாரையும் பெற்றுக்கொண்ட ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தாம்சம் சேவியர் இருதரப்பிலும் விசாரணை நடத்தி வருகிறார்.

தர்பார் பட விவகாரம்!மனு கொடுத்த நபர்?

0

பேட்டை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் படத்தில் நடித்து முடித்து விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது அனிருத் இசையமைத்துள்ளார் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வருகிற 9ம் தேதி வெளியிடப்படுகிறது வெளியே வெளியீடு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது
சூப்பர் ஸ்டாரின் ரஜினி படம் என்றாலே அவர்களின் ரசிகர்கள் பலவிதங்களில் கொண்டாடுகின்றனர்.

அவர் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, கட்டவுட்டுக்கு மாலை அணிவிப்பது போன்ற பல கொண்டாட்டங்கள் செய்து அவரின் படத்தின் வெளியீடு திருவிழா போல் கொண்டாடுவர்கள்.

இதன் உச்சகட்டமாக சேலம் ஏ ஆர் ஆர் எஸ் திரையரங்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி அளிக்குமாறு சேலம் வட்டாட்சியரிடம் கனகராஜ் என்பவர் அனுமதி கேட்டிருக்கிறார். இது அனைவரிடமும் பெரும் பர பரப்பாக பேச பட்டு வருகிறது.

சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் ; ஈரானின் புதிய தளபதி அதிரடி

0

ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்கா  நடத்திய  வான்வழி  தாக்குதலில், ஈரானின் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரான ராணுவ தளபதி  குவாசிம்  சுலைமானி  கொல்லப்பட்டார்.  இந்த தாக்குதலில்,  அவருடன்  ஈராக்  துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ்  உட்பட 6  பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு  நாடுகளில் பதற்றம்  அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர  ராணுவ  தளபதியாக, குவாசிம் சுலைமானிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி  பொறுப்பேற்றுள்ளார். குவாசிம் சுலைமானி அமெரிக்கா வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டது  குறித்து  பேசிய  இஸ்மெயில் கானி, “சுலைமானி  கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம்” என்று கூறினார்.

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று ஈராக்  பாராளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ள  நிலையில், ஈரானின்  புதிய ராணுவ தளபதி  மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே, 2015 போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில்  எஞ்சியிருந்த  நிலுவைகளையும்  கைவிடப்போவதாக  ஈரான் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை  தயாரிக்கும்  வாய்ப்பு உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈராக்கில் இருந்து அமெரிக்க  படைகளை  வெளியேற்றினால், பல பில்லியன் டாலர்கள் இழப்பீடாக  ஈராக்  தர வேண்டியிருக்கும். அவ்வாறு தர மறுக்கும்  பட்சத்தில், ஈராக்கிற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார  தடைகள்  விதிக்கப்படும் என்று  மிரட்டல்  விடுத்துள்ளார்.

ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரை நிராகரிப்பு; மு.க.ஸ்டாலின்

0

தமிழக  சட்டப்பேரவை  ஒவ்வொரு  ஆண்டும்  ஜனவரி  முதல்  வாரம் கூடுவது வழக்கம். அதன்படி  இந்தாண்டின்  முதல்  கூட்டம்  இன்று  தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ஆளுநர் உரையை தொடங்கினார். இந்நிலையில் ஆளுநர் உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து  திமுக  உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை நிராகரிப்பதாகவும் , குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் “என்று தெரிவித்தார்.

மேலும் அவர்  கூறுகையில் “  7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர்  எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக  உயர்ந்துள்ளது;  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளதாக  கபட நாடகம் , “ என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்

இதனை தொடர்ந்து காங்கிரஸ்  கட்சியினரும், டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு  செய்தனர்.

திரெளபதி ட்ரெய்லர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி! யாரும் எதிர்பார்க்காத திருமாவின் ரியாக்ஸன்?

0

திரெளபதி ட்ரெய்லர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி! யாரும் எதிர்பார்க்காத திருமாவின் ரியாக்ஸன்?

தமிழகம் முழுவதும் மிக பரபரப்பாக தற்போது பேசப்படும் விவாதம் ‘திரௌபதி” என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகும் முழுக்க முழுக்க மக்களிடம் நிதி பெற்று ஒரு திரைப்படத்தை எடுத்து தமிழக அளவில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி அவர்கள்,

வடமாவட்டங்களில் திட்டமிட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கடத்தி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, பெற்றவர்களின் கையில் பேரம் பேசி பணம் பெறும் கொடூரமான கும்பலின் முகத்திரையை கிழிக்கும் கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் தமிழகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றது,.

திரெளபதி ட்ரெய்லர் வெளியான 3 நாட்களில் சுமார் 25 லட்சம் பேர் டிரெய்லரை யூடியூப் மூலமாக பார்த்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக ட்ரெய்லர் பரவியதன் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் பார்வையாளர்கள் திரௌபதி திரைபடத்தின் ட்ரெய்லரை பார்த்துள்ளனர்,.

இச்சூழ்நிலையில் நாடக காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தாக்கிய ஒரு சில வசனங்கள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன,. திருமாவளவன் போல் டிரைலரில் ஒரு உருவம் காட்டப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரெளபதி டிரெய்லருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருமாவளவனை சந்தித்த செய்தியாளர்கள் திரெளபதி திரைப்படத்தில் உங்களையும் உங்கள் கட்சியினரையும் சார்ந்து இருப்பதால் நீங்கள் என்ன கருத்து தெரிவிக்கிறிர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் எதுவும் பேசாமல் குடியுரிமைச் சட்டத்தை பற்றி பேசி செய்தியாளர்களை திசை திருப்பினார்., அவர் முகத்தில் குற்றம் புரிந்த ஒரு கலக்கம் தெரிந்தது.

செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா?

0

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட சில இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றாலும் ஏறக்குறைய இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆனால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

இதில் விதி விலக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக போட்டியிட்ட இடங்களில் ஏறக்குறைய பாதி இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு அடுத்து 3 வது கட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான பாஜக மற்ற கட்சிகளை விட அதிகமான இடங்களில் போட்டியிட்டு அதில் 10 சதவீத இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

அதிமுக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 214
போட்டியிட்டது – 435
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 1781
போட்டியிட்டது -3842

பாமக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 16 (தோராயமாக)
போட்டியிட்டது -36
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 224
போட்டியிட்டது -430

தேமுதிக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 3
போட்டியிட்டது -29
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 99
போட்டியிட்டது -434

பாஜக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 7
போட்டியிட்டது -81
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 85
போட்டியிட்டது -535

இந்நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் பாஜகவிற்கு அதிமுக வழங்கிய இடங்கள் போதவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார். அதே போல பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் பேசிய போதும் அதிமுகவை விமர்சிக்கும் வகையிலேயே குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் வாங்கிய வாக்குகளின் சதவீதத்தை பார்க்கும் போது பாமகவை விட பாஜக குறைவான வாக்கு வங்கியை தான் வைத்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமகவை விட பாஜக அதிக இடங்களை பெற்றது கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு அதிக இடங்களை பெற்றதா? என்றும் சந்திக்கபடுகிறது.

எந்த அதிகாரத்தை பயன்படுத்தி அதிக சீட்டுகளை வாங்கினாலும் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என பாஜக நிர்வாகிகளுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் புரிய வைத்திருக்கும் என்று அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நீட் நுழைவு தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு?

0

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘NEET(National eligibility cum entrance test) நுழைவு தேர்வு மதிப்பெண் எடுத்து கொள்ள படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது.

இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட பட்டு இருந்தது.

இதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே டிசம்பர் மாதம் 31-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்
கோரிக்கையை ஏற்று, 6-ந் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மேலும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை 07.01.2020 (நாளை )கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.