சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5798

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்!

0

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்!

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில் தற்போது அர்ஜென்டினாவில் இருக்கும் ஒருவர் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் அச்சு அசலாக அவர் மைக்கேல் ஜாக்சன் போல் இருப்பதை அடுத்து மற்றும் ஜாக்சன் இதுநாள் வரை மறைந்து வாழ்ந்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த செர்ஜியோ என்பவர் ஒரு பாப் இசை பாடல்களை மேடையில் பாடினார். அச்சு அசல் மைக்கேல் ஜாக்சன் போலவே அவர் நடனமாடி பாடல்களை பாடினார். அதுமட்டுமன்றி சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்திலும் மைக்கேல் ஜாக்சன் போலவே நடித்ததால் உலகம் முழுவதும் புகழ் பெற்றார். அவரது நடை உடை பாவனை பேச்சு நடனம் ஆகிய அனைத்தும் அச்சு அசலாக மைக்கேல் ஜாக்சன் போலவே இருப்பதால் இவர் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் சில சில ஆண்டுகள் மறைந்து வாழ்வதற்காக அவர் இறந்து விட்டது போல நாடகமாடி உள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனை ஷோ செர்ஜியோ, தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இது குறித்து செர்ஜியோ கூறும்போது ’என்னை ஒரு பத்திரிகையாளர் பேட்டி எடுத்தபோது மைக்கேல் ஜாக்சன் போன்று இருப்பதால் அதேபோல் மேக்கப் போட்டு பேட்டி எடுத்தார் என்றும் அதன் பின்னர் சுவிஸ் நாட்டின் விளம்பர படத்தில் மைக்கேல் ஜாக்சன் போல் வேடமிட்டு நடித்ததால் என்னை உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று கூறி வருகிறார்கள் என்றும் ஆனால் எனக்கு மைக்கேல் ஜாக்சனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்

சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடம்?

0

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.1979 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் தரிசன விழா 40 கழித்து இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 16-ந் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது.

அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

48 நாட்கள் நடைபெற்ற விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் படுத்த கோலத்திலும் , மீதி நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். விழா நடைபெற்ற ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 3.59 கோடி பக்தர்கள் காஞ்சிபுரம் நகருக்கு வந்தனர் என தகவல் வந்துள்ளது.

ஆகஸ்டு 16-ந் தேதி தரிசனம் முடிந்ததும் அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தபடி உள்ளது.

அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் அவர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் குளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.

இதன் காரணமாக வழக்கத்தை விட காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து காண படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் தற்போது காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

இதற்கு அத்திவரதர் தரிசனமே காரணம் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு வரை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 5.82 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு 4.19 கோடி பேர் வருகை தந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்திவரதர் தரிசனம் மவுசால் சுற்றுலா இடத்தில் சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது, சென்னை 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 2.75 கோடி சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

0

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது தெரிந்ததே.

இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்க உள்ள கீர்த்தி சுரேஷ் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இன்று கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டதை அடுத்து கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தின் உள்ளே வந்ததும் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கேக் வெட்டினர். இந்த கொண்டாட்டத்தின்போது கீர்த்தி சுரேஷ்க்கு ரஜினிகாந்த் கேக் ஊட்டினார். இதுகுறித்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நேற்று கீர்த்தி சுரேஷ் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களிடம் தேசிய விருது பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த கேக் வெட்டும் கொண்டாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

0

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பாண்டில் ஆயிரத்து 700 கோடி டாலர் அதிகரித்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்ற முறை பதின் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் இம்முறை 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடப்பாண்டில் டிசம்பர் 23-ஆம் தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1,700 கோடி டாலர் சுமார் 1.20 லட்சம் கோடி உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவரது மொத்த சொத்து மதிப்பு 6100 கோடி டாலரை எட்டியுள்ளது RIL பங்கின் விலை 45 உயர்ந்திருப்பதை முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பங்கு சந்தை தொடர் ஏற்றம் கூட அவர் சொத்து மதிப்பு உயர முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

சென்றமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

0

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இதில் நடந்த பகலிரவு டெஸ்ட் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானம் என்று அழைக்கப்படும், மெல்பர்னில் நாளை தொடங்குகிறது இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ஒரு சிறப்பு உண்டு, அந்த சிறப்பு என்னவென்றால்

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பொதுவாக கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் பாக்ஸிங் டே என்று பெயர். இந்த பாக்ஸிங் டே போட்டியில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது அது குறித்து இப்போது பார்ப்போம்.

முதலில் பக்கிஸ் பாக்ஸிங் டே என்றால் என்ன என்று பார்ப்போம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற மேலை நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கும் பழக்கமுண்டு ஆலயத்திற்கு வருபவர்கள் தங்களால் முடிந்த கொடையை போடுவார்கள் மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி அன்று பாக்ஸை பிரித்து அதில் உள்ள பணம் பொருட்கள் ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவது வழக்கம் பாக்சை திறக்கும் நாள் ஆங்கிலத்தில் பாக்ஸிங் டே என்று அழைக்கப்படுகிறது.

மேலும் தங்களிடம் ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்களது குடும்பத்தை பார்க்க செல்லும் போது அவர்களின் முதலாளிகள் சிறப்பு கிறிஸ்துமஸ் பாக்ஸ் பரிசாக கொடுத்து அனுப்புவார்கள் இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி அதாவது ஒரு அணி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கும்.

கடந்த முறை இங்கு இந்திய அணி விளையாடி வெற்றி கண்டது இந்த தடவை வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோதாவில் குதித்து விளையாட இருக்கிறது 1987 க்கு பிறகு இது இரண்டாவது முறையாகும்.

கடந்த முறை பாக்சிங் டே போட்டியில் இந்தியாவுடன் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி இந்த முறை பாக்ஸிங் டே போட்டியில் வெற்றி பெறும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நித்தியானந்தா பற்றிய அடுத்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ?

0

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன என்பதை கண்டறிந்து தகவல் கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

இதனிடையே ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக புதிய புகார் தகவல் வந்துது.

இன்டர்போல், சி.பி.ஐ. உதவியுடன் அவரை கைது செய்ய கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும் இதுவரை அவரது இருப்பிடத்தை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

போலீஸ் தேடினாலும் நித்யானந்தா அவ்வப்போது சமூகவலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் புதிதாக வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:-

பாலியல் பலாத்கார வழக்கில் என்னை போலீசார் கைது செய்தபோது அதற்கான காரணத்தை இன்றும் கூறவில்லை. கைது செய்த பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி போலீசார் தேடினர்.

2002-ம் ஆண்டு முதல் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளது. எனவே என் மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும்.

நான் பல வி‌ஷயங்களில் ஜெயித்த போராளி என்றும் . நெத்தியடி என்பது போல் நித்தியடி என்ற ‘டிரண்டு’ உருவாகி உள்ளது. எனது சீடர்கள் நித்தியடி கொடுக்க வேண்டும்.என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க தோற்கும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ஆருடம்.

0

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜே.எம்.எம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் முன்னணி பெற்றது.

இதைத் தொடர்ந்து 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதிவியேற்கவுள்ளார்.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா ஜ க ஆட்சியை இழந்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்டிலும் தோல்வியை சந்தித்திருப்பது பா ஜ க வுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.  இந்நிலையில்,அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா ஜ க தோல்வியடையும் என்று பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளார்

இதுதொடர்பாக மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவாண் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

“ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 65 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பா.ஜனதா கூறியது. ஆனால், அதில் பாதியைக்கூட கைப்பற்ற முடியவில்லை. சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் வீழ்ச்சி, குஜராத் தேர்தலிலேயே தொடங்கி விட்டது.

மோடி, அமித் ஷாவை போல், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்யவில்லை. இருந்தாலும், அங்கு பா.ஜனதா வீழ்ந்து விட்டது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பீகார், டெல்லி சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜனதா தோற்கும்.” என்று கூறினார்.

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

0

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்திற்கு ஏற்கனவே ’அமர்’ மற்றும் கோப்ரா’ போன்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்த நிலையில் இந்த இரண்டில் ஒன்றுதான் இன்று அறிவிக்கப்படும் டைட்டில் என தெரிகிறது.

விக்ரம் ஜோடியாக ஸ்ரீனிதிஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை லலித்குமார் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

0

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

விற்பனையை அதிகரிக்க மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்றும், இதனால் ஏற்படும் விபத்துகளை குறைக்க போக்குவரத்து கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ள உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்று ஓர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை ஒவ்வொரு ஆண்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரமான அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தான் உண்மை என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட 50%க்கும் கூடுதலான மக்கள் விபத்துகளில் இறக்கின்றனர் என்பது தான் ஆய்வுகளில் தெரியவந்துள்ள உண்மையாகும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகின் தலைசிறந்த ஆய்வு இதழாக போற்றப் படும் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் நடத்தப்படும் உடல்கூறு ஆய்வுகளில் தெரியவரும் இறப்புக்கான காரணங்களின் அடிப்படையில், 2017 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் மட்டும் 2 லட்சத்து 18,876 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதே ஆண்டில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்த எண்ணிக்கையான ஒரு லட்சத்து 47,913&ஐ விட 70,963 அதிகமாகும்.

நெடுஞ்சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 2 லட்சத்து 17,379 பேர் இரு சக்கர ஊர்திகளிலும், மோட்டார் வாகனங்களிலும், நடந்தும் பயணித்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் 76,729 பேர் (35.1%) பாதசாரிகள் ஆவர். 67,524 பேர், அதாவது 30.90 விழுக்காட்டினர் இரு சக்கர வாகனங்களிலும், 57,802 பேர்(26.40%) மோட்டார் வாகனங்களிலும் பயணம் செய்தவர்கள். மிதிவண்டிகளில் சென்றவர்களில் 15,324 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் ஆகும்.

உலக அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் விகிதம் 1990-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரையிலான 27 ஆண்டுகளில் 8.10% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த விகிதம் 58.70% அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் தவறான போக்குவரத்து கொள்கை தான்.

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வாகனப் புரட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று உலகின் அனைத்து நிறுவனங்களின் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு சாலைப்பாதுகாப்பின் அளவும், கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. இதனால் தான் இந்தியாவில் சாலைவிபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் போக்குவரத்துக் கொள்கையும், அணுகுமுறையும் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம் ஆகும். இந்த தவறான நம்பிக்கைக் காரணமாக சாலைகளில் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுகள், மகிழுந்து வாங்க முடியாமல் இரு சக்கர ஊர்திகளிலும், மிதிவண்டிகளிலும் பயணிப்போரின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது இல்லை.

வாகனங்களுக்கு ஆதரவான கொள்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் எதுவும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. பொதுப் போக்குவரத்துக்கு தான் வளர்ந்த நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான் பொருளாதார வலிமை மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் லாபி, தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதே அணுகுமுறை நீடித்தால் இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் விபத்து உயிரிழப்புகள் குறையாது.

இந்த நிலையை மாற்றி இந்தியாவை சாலைவிபத்துகளில் உயிரிழப்புகள் குறைந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக சாலைகளில் இரு சக்கர ஊர்திகள், மிதிவண்டிகள் ஆகியவற்றுக்கு தனித்தனி தடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்; நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அதிவிரைவுப் பேருந்து பாதைகள் (Chennai Bus Rapid Transit System – BRTS ) அமைக்கப்படுவதுடன், பொதுப்போக்குவரத்து வலுப்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது!

0

முன்னாள் பிரதமரும் மூத்த தலைவராக இருந்த மறைந்த அட்டல் பிகாரிவாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நினைவிடம் அமைந்திருக்கும் டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

இந்நிலையில், அட்டல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர்களான அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவரும் அவரது நண்பருமான அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக கட்சியினரும் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.