திராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில்! பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா?

0
302

திராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில்! பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கார்ப்பரேட் அரசியல் வியாபாரி என்று அழைக்கப்படும் பிராமணர் பிரசாந்த் கிஷோர் கட்டுப்பாட்டில் சென்று விட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தல்களில் நீடிக்கவில்லை, இதை அலசி ஆராய்ந்து திமுக தரப்பு பார்த்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த கவர்ச்சி வாக்குறுதிகளால் தான் நாம் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்று திமுக உடன் பிறப்புகள் புரிந்துகொண்டனர்,.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இடைத்தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய அடி தான், வடநாட்டுகாரன் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிராமணர் பிரசாந்த் கிஷோரிடம் உதவிக்கு தேடி ஓடவைத்தது, தமிழக ஆட்சிக் கட்டிலில் உட்கார வைக்க பலநூறு கோடிகள் ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு தான் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்தார் பிரசாந்த் கிஷோர்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு வழிவகுத்து கொடுத்தவர், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இவர்களின் வரிசையில் மு.க.ஸ்டாலினை கொண்டு வர மருமகன் சபரீசன் விடாமுயற்சியால், அரசியல் வியாபாரியின் ஆதரவை கெஞ்சி கேட்டு வாங்கியுள்ளார்,

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தவிர வேறு எந்த கட்சி தலைவரும் மக்கள் முன் பெரிய ஆளுமையாக தெரிய கூடாது, அவர்களுடைய விளம்பரம் கூட மக்களிடம் சென்றடைய கூடாது ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்க வைத்து அவர்களின் செல்வாக்கை சரியசெய்வதே பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் வியாபாரியின் தந்திரம்.

தற்போது இணைய உலகம் கையில் இருப்பதால் சமூக வலைதளங்கள் மூலம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் செய்யும் வேலைகள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சென்று விடுகின்றனர்,.

பிரசாந்த் கிஷோரின் முக்கிய நோக்கமே சமூக வலைத்தளங்களில் திமுகவிற்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் எதிராக பரப்பப்படும், விமர்சிக்கப்படும் பதிவுகளை கொண்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்க செய்வதே முதல் பணி,. மேலும் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக செயல்படும் இளைஞர்களை தங்கள் வசம் கொண்டு வந்து திமுக ஆதரவாக செயல்பட வைப்பது இன்னொரு தந்திரம்,.

அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் அவர்கள் பொது மேடையில் எதை பற்றி பேசலாம், அறிக்கை வெளியிடலாம் என்பதை முழுவதும் தீர்ப்பளிப்பது IPAC எனப்படும் பிராமணர் பிரசாந்த் கிஷோரின் கார்ப்பரேட் கம்பெனி ஆகும், திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தான் செய்ய சொல்லும் வேலைகளை செய்தால் மட்டும் போதும் என்று ஒரு நிழல் தலைவர் போல் செயல்படப் போகிறார் பிரசாந்த் கிஷோர், கட்சியில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அனைத்து திமுக பிரமுகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இனி செயல்திட்டம் வகுத்து கொடுத்து வேலை வாங்க போவதே பிரசாந்த் கிஷோரின் IPAC கார்ப்பரேட் கம்பெனி தான்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஜாம்பவனாக மக்கள் முன் விளம்பரப்படுத்தி 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் ஸ்டாலினை உட்கார வைக்க செயல்படுத்தப்பட இருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் அமலுக்கு வந்துவிட்டன. இந்த செயலை பிடிக்காமல்தான் மூத்த அரசியல் தலைவர் பழ.கருப்பையா அவர்கள், “ஒரு அரசியல் தலைவன் தனது செயல்பாட்டினால் மூலம் தான் மக்களை கவர வேண்டுமே தவிர” “கார்ப்பரேட் கம்பெனி மூலம் மக்களை கவரலாம் என்று எண்ணினால் அது தவறானது” என்று அதிரடியாக தெரிவித்து திமுகவில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமானது என்னவென்றால் பிரசாந்த் கிஷோர் ஒரு பிராமணர், பிகார்‌ மாநிலத்தை சேர்ந்த வட நாட்டுக்காரர், திமுக என்பது ஒரு திராவிட இயக்கம், அதன் நோக்கமே பிராமணர்களை எதிர்த்து கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஒரு தீவிரமான இயக்கமாகும். திமுகவில் பிராமணர்களுக்கு இடம் கிடையாது என்பது எழுதப்படாத விதி, ஒரு பிராமணர் திராவிட கட்சியை கட்டுப்பாட்டில் வைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

திராவிட புதல்வன் என்று திராவிடர்களால் அழைக்கப்படும் மு.க.ஸ்டாலின் ஒரு பிராமணர் கட்டுப்பாட்டில் வந்து விட்டார், பெரியார், திராவிடம் என்று கொக்கறித்து கொண்டு இருக்கும் திராவிட கூடாரங்களின் தலைவர்கள் கீ.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்ற தலைவர்கள், திமுகவின் உடன்பிறப்புகள் எல்லாம் அடிமைகளாகவே இருந்து விடலாம் என்று எண்ணுகிறார்களோ என்று தெரியவில்லை.

தமிழக மக்களிடம் பெரியார் மண், திராவிடம் என்ற சொல்லை திராவிட முன்னேற்றக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் கூட சொல்லிக் கொண்டு இருப்பார்,. நிஜத்தில் ஒரு பிராமணர் கையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெரியார் அண்ணா வழி வந்த மாபெரும் இயக்கம் சிக்கித் தவிக்க போகிறது என்பதை திமுக தொண்டர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்,

தன்னுடைய சுயநலத்திற்காக பெரியார், அண்ணாவின் திராவிடம் யாரை எதிர்த்து ஒரு இயக்கமாக மாறியதோ அந்த இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய கரும்புள்ளியை ஸ்டாலின் வைத்துவிட்டார் என்பதே திராவிடத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

author avatar
Parthipan K