கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை!சென்னையில் பரபரப்பு?

கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை!சென்னையில் பரபரப்பு?

சென்னையில் குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவிக நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா வயது 39 இவருக்கு நஸ்ரின் என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் நஸ்ரின் மற்றும் உபயதுல்லா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த உபயதுல்லா … Read more

வில்லியம்சை பழிதீர்த்த கோலி?

வில்லியம்சை பழிதீர்த்த கோலி?

வில்லியம்சை பழிதீர்த்த கோலி? நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்களை எடுத்தது அடுத்ததாக ஆடிய இந்திய அணி 18.4 ஓவரிலேயே இலக்கை அடைந்தது இந்தியாவின் கேப்டன் கோலி 94 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும் இப்போட்டியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீரர் … Read more

மீண்டும் 29 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கம் விலை!

மீண்டும் 29 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கம் விலை!

தங்கத்தின் மீதான முதலீடு என்பது நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 28 ரூபாய் குறைந்து 3612 … Read more

தனுஷ் நடிக்கும் கர்ணன்!எப்போது படப்பிடிப்பு?

தனுஷ் நடிக்கும் கர்ணன்!எப்போது படப்பிடிப்பு?

அசுரன் பட பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் ’பட்டாஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது இதனையடுத்து ‘கர்ணன்’ படத்தைத் தொடங்க தனுஷ் முடிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்தின் முதற்கட்ட லண்டன் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் தனுஷ். அடுத்த ஓரிரு நாட்களிலேயே ’பட்டாஸ்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கினார். துரை.செந்தில்குமார் இயக்கத்தில் … Read more

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஜனநாதனின் உதவியாளர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். மேலும் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் ’லாபம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் ஜனநாதன் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரின் படங்களிலும் விஜய்சேதுபதி நாயகனாக … Read more

திட்டம் போட்டு உள்ளாட்சித் தேர்தலில் பழி வாங்கியதா திமுக? ஒரே கல்லில் 2 ”மாங்காய்” பறிக்க திட்டம்?

திட்டம் போட்டு உள்ளாட்சித் தேர்தலில் பழி வாங்கியதா திமுக? ஒரே கல்லில் 2 ''மாங்காய்" பறிக்க திட்டம்?

திட்டம் போட்டு உள்ளாட்சித் தேர்தலில் பழி வாங்கியதா திமுக? ஒரே கல்லில் 2 ”மாங்காய்” பறிக்க திட்டம்? உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக அவசர வழக்கு தொடர்ந்ததால், புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று முதலில் … Read more

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு பிரான்ஸ் நாட்டின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதிய வயது வரம்பு 62 லிருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சேவை காலத்தை பொருத்து ஓய்வூதிய தொகை மாறுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதாவது ஓய்வூதிய வயது 64 வயதுக்கு முன்னரே ஓய்வு கோரினால் ஓய்வூதியத் தொகை வேறுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது பிரான்ஸ் அரசின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு … Read more

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து ஹைதராபாத்தில் நேற்று நடந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து பல்வேறு துறையினர் தங்களது கருத்தை கூறி வரும் நிலையில் நடிகை நயன்தாரா சற்றுமுன்னர் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு … Read more

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம்: தடுத்து நிறுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம்: தடுத்து நிறுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம்: தடுத்து நிறுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாட்டில் சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணத்தை … Read more

வீடூர் அணை திறப்பு! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

வீடூர் அணை திறப்பு! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

வீடூர் அணை திறப்பு! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க, மீன்பிடிக்க ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர். மேலும் நீரில் இறங்கி ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (05.12.2019) மாலை புதுச்சேரி வில்லியனூர் … Read more