நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன்
காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அவர்கள் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அக்டோபர் 13ம் தேதி நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு எதிரான லீக் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு கான்வே 45 ரன்களும் டேரி மிட்செல் 89 ரன்களும் சேர்த்தனர். மேலும் கேன் வில்லியம்சன் அவர்கள் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களில் 78 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இந்த போட்டியின் பொழுது நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அவர்களுக்கு கட்டை விரலில் அடிபட்டது. மேலும் சோதனை செய்து பார்த்த பொழுது கட்டை விரலில் அடிபட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அவர்களுக்கு கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு சரியானது.
இதையடுத்து கேன் வில்லியம்சன் அவர்கள் தற்பொழுது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து நவம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கேன் வில்லியம்சன் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் போட்டியில் முழங்காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து அதிலிருந்து குணமடைந்து தற்பொழுது உலகக் கோப்பை தேரில் விளையாடுவதற்கு அணிக்கு திரும்பினார். தற்பொழுது மீண்டும் கை கட்டை விரலில் அடிபட்டு அதிலிருந்து மீண்டும் குணமடைந்து அணிக்கு திரும்பவுள்ளார்.