கடகம் – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
66
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் நினைத்ததை அப்படியே செய்து முடிக்கும் நாளாக அமையும். கணவன் மனைவியுடைய அதி அற்புதமான அன்யூனியம் நிலவுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். இல்லத்தில் மங்கள காரியங்கள் நடைபெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும்.

 

கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருப்பதால் புதிய முதலீடுகளை இன்றைய தினம் அருமையாக செய்வீர்கள்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலம் ஆதாயம் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani