தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன?

0
139
Can't stand it !! What happened to the dead cockroaches that were auctioned for crores?
Can't stand it !! What happened to the dead cockroaches that were auctioned for crores?

தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன?

நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளாகும். இது அமெரிக்காவின் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளது.

 ஆய்வின் போது நிலவில் உள்ள மேற்பரப்பில் நாற்பத்தி ஏழு பவுண்டுகள் சந்திர பாறைகள்  பூமிக்கு எடுத்து வந்திருந்தார்கள் .இந்நிலையில் நிலவின் உள்ள பாறைகள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமா என்று கண்டறிய நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆய்வில்  ஈடுபட்டு வந்துள்ளது.

எனவே இதற்காக விண்வெளியிலிருந்து மேற்பரப்பில் எடுத்து வரப்பட்ட சிறிதளவு துகள்கள் முதலில் கரப்பான் பூச்சிக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் துகள்களை மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது. ஆய்வு செய்ததில் கரப்பான் பூச்சிக்கு எந்த வித  பாதிப்பும் ஏற்படவில்லை.இதனால் நிலவின் உள்ள துகள்கள் நச்சுத்தன்மை வாய்ந்ததா இல்லையா என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த பூச்சிகளில் வேறு ஏதேனும் கடுமையான விளைவுகள் ஏற்படுத்திருக்கும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.

நாசாவிற்கு சொந்தமான சுமார் 40 மில்லி கிராம் நிலவில் உள்ள தூசி மற்றும் மூன்று உயிரிழந்த கரப்பான் பூச்சிகளை ஒரு குப்பியை கொண்ட சோதனை செய்த பொருள்கள் அனைத்தும் தற்போது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இவைகள் குறைந்தபட்சம் 400,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ 3 கோடி ஆகும்.ஆனால் இந்த ஏல விற்பனையில் நாசா நிறுவனம் தடுத்தது. நாசாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஏலத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இவைகள் அனைத்தும் இன்னும் மைய அரசுக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார்.

ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலவு தூசி மற்றும் மூன்று உயிரிழந்த கரப்பான்பூச்சிகள் அடங்கியவை நாசாவுக்கு சொந்தமானது என்பதும் இந்தப் பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகுதான் இதனை விற்பனைக்கும் அல்லது தனி நபர் வைத்திருக்கவும் மற்றும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்கள் காட்சிக்காக வைத்திருக்க அனுமதி வழங்கப்படவில்லை என  கடிதம் வழியாக நாசா கூறியுள்ளது. இந்தப் பொருட்களையெல்லாம் ஏலம் விடுவதை உடனே நிறுத்திவிடுங்கள். அப்படி நிறுத்தாவிட்டால் அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாசா நிறுவனம் கூறியது.

author avatar
Parthipan K