மகரம் – இன்றைய ராசிபலன்! நிதானத்துடன் செயல்படும் நாள்!!

0
75
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் – இன்றைய ராசிபலன்! நிதானத்துடன் செயல்படும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்று உண்டாகும். அதன் மூலம் மாலைக்கு பின் அலைச்சல் உறுதியாகும். நிதி சிறப்பாக இருக்கும்.

 

கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும் என்றாலும் மாலைக்கு பின் சிறிதளவில் பிரச்சனைகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலை எச்சரிக்கை வேண்டும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு உடலில் ஒரு வித சோர்வு வந்து நீங்கும். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani