ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்க இதோ எளிமையான வழிமுறைகள்!

0
68

தற்போது இருக்கக்கூடிய வாழ்வியல் சூழல் மற்றும் உணவியல் முறை என்பது மனிதவாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

அதிலும் திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்தும் கூட குழந்தைகள் இல்லை என்று இன்றளவும் பலர் புலம்பித் தீர்த்து வருகிறார்கள்.

பலர் மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கான பணங்களை செலவழித்தும் எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை.

அப்படி இருக்கும் நபர்களுக்கு இதோ நமக்கு தெரிந்த ஒரு சில இயற்கையான வழிமுறைகள் இதனை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரும் பச்சயாக விரும்பி உண்ணும் காய்கறிகளில் கேரட் முதன்மையாக இருந்து வருகிறது அடிக்கடி உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்புகள் கரைந்து விடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், உள்ளிட்டவை காரணமாக, உடலுக்கு நன்மை பல கிடைக்கின்றன. கண்கள் தொடர்பான பிரச்சனைகள் குணமடைந்து கண்கள் ஆரோக்கியமான நிலைக்கு மாறும், மாலைக்கண் நோய் பிரச்சனை முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புண்டு.

இந்த கேரட்டில் விட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது என்பதால் கண்களின் பார்வை திறனை அதிகரிக்கிறது தோலுக்கு புதுப் பொலிவு வழங்குகிறது. உடலினை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.

நாள்தோறும் ஒரு கேரட்டை சாப்பிட்டு வந்தால் உடலிலிருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேற்றப்பட்டு குடல் புண்கள் வராமல் பாதுகாக்கிறது. நெஞ்சில் உண்டாகும் எரிச்சல் சரியாக இந்த கேரட் சாறை நாள்தோறும் குடித்து வருவது நன்மையை தரும்.

இத்துடன் சேர்த்து இஞ்சி சாறு சிறிதளவு சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும், வயிற்றில் உண்டாகும் கற்கள், கட்டிகள், உள்ளிட்ட பிரச்சனைகள் குணமடைய வாய்ப்பிருக்கிறது. மஞ்சள்காமாலை பிரச்சினைக்கு இந்த கேரட் சாறை குடிக்கலாம்.

இந்த கேரட் சாறுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால் பித்த கோளாறுகள் சரியாகும், சிறுநீர் கழிக்கும் சமயங்களில் உண்டாகும் எரிச்சலைக் குணப்படுத்தும். கேரட் பச்சடி போல் செய்து சாப்பிட்டலாம் வாரத்திற்கு 3 நாட்கள் கேரட் சாப்பிட்டால் மாலைக்கண்நோய் உண்டாகாது என தெரிவிக்கப்படுகிறது.

ஆண்கள் கேரட்டை அதிக அளவு சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். குழந்தை பெற்றுக் கொள்வதற்கான பாக்கியமும் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.