திடீரென்று உயரவிருக்கும் கேஸ் சிலிண்டர் விலை!

0
73

நாடு முழுவதும் வீடுகளில் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கும் எரிவாயு சிலிண்டர் அவ்வபோது சாமானிய மக்கள் தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவிற்கு உயரத்திற்கு சென்று விடுகிறது.

அதாவது எரிவாயு சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது இதனால் சாதாரண சாமானிய மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில, அரசுகள் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்துவிட்டால் சிலிண்டர் விலையில் 100 ரூபாய் மானியம் அளிப்பதாக தெரிவித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை திமுக இதுவரையில் நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில், இந்த எரிவாயு சிலிண்டருக்கான டிமாண்ட் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேசமயம் எரிவாயு உற்பத்தி தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வருகிறது.

இதனால் சர்வதேச அளவில் எரிவாயுவிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது எரிவாயு பற்றாக்குறையின் தாக்கம் க ஏற்கனவே சர்வதேச நாடுகளில் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் எரிவாயு கொள்முதலை குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போதிருக்கும் சூழ்நிலையில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் ஏப்ரல் மாதம் எரிவாயு பற்றாக்குறையின் உண்மையான நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை எரிவாயு விலையை ஏப்ரல் மாதம் மத்திய அரசு நிறுத்தவிருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் சர்வதேச நிலவரத்திற்கு ஏற்றவாறு விலை திருத்தம் செய்யப்படும் என்று சொல்கிறார்கள். இதனடிப்படையில் ஏப்ரல் மாதம் எரிவாயு விலை இரு மடங்குக்கு மேல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இயற்கை எரிவாயு விலையை மத்திய அரசு திருத்தம் செய்து வருகிறது. சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை ஒவ்வொரு டாலர் உயர்வுக்கும் இந்தியாவில் 4.5 ரூபாய் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.