மாணவரிடம் சாதிரீதியாக உரையாற்றிய பள்ளி ஆசிரியர் அதிரடி பணியிடை நீக்கம்!

0
76

விளாத்திகுளம் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவரிடம் ஆசிரியை கலைச்செல்வி என்பவர் சாதிரீதியாக உரையாற்றும் ஆடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த ஆடியோவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட சாதியினருக்கு வழங்கக்கூடாது என்று ஆசிரியை கலைச்செல்வி பள்ளியில் படிக்கும் மாணவனிடம் பேசியிருக்கிறார்.

குறிப்பிட்ட ஜாதியினர் பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது அதன் காரணமாக, உன்னுடைய ஜாதியைச் சார்ந்த ஊர்கார்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வா என அந்த மாணவரை ஆசிரியர் தூண்டும் விதமாக உரையாற்றி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது ஜாதி ரீதியாக உரையாற்றிய ஆசிரியை கலைச்செல்வி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் மாணவரிடம் சாதிரீதியாக உரையாற்றிய கொளத்தூர் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியைகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆசிரியைகள் கலைச்செல்வி மற்றும் மீனா தொழில்துறை முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்.