அண்ணாமலை குறித்த கேள்விக்கு கடுப்பான எடப்பாடியார்!

அண்ணாமலை குறித்த கேள்விக்கு கடுப்பான எடப்பாடியார்! அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கடுப்பாக பதிலளித்தார். மதுரைக்கு திருமண விழாவிற்கு வருகை வந்த எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உடன் மட்டுமே பேச்சு என்றும் மேல பாஸ் இருக்கும்போது, கீழ இருப்பவரை பத்தி எதுக்கு பேச வேண்டும் … Read more

12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்!

12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்!  சட்டமன்றத்தில் ஏற்றப்பட்ட 12 மணி நேர கட்டாய வேலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இது தொழிலாளர் விரோதப் போக்கு என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையாக கடைபிடித்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். … Read more

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி. முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக … Read more

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் அருந்தலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு செக் வைத்ததுதான் டுவிஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கிய தமிழக அரசு. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மது விளக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பார்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் … Read more

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு. இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் அட்சய திருதியை பண்டிகை கொண்டப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு இப்படியொரு பண்டிக்கை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த அட்சய திருதியை … Read more

அரசு பங்களாவை காலி செய்த ராகுல் – செய்தியாளர்களிடம் உருக்கம்!!

அரசு பங்களாவை காலி செய்த ராகுல் – செய்தியாளர்களிடம் உருக்கம்!! பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் … Read more

கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் பயன்படுத்தக்கூடாது – எடப்பாடி தரப்பினர்!!

Karnataka election!! EPS OPS Confused Again!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை, அதிமுக சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் எனக் கூறியுள்ளார் பன்னிரின் ஆதரவாளரான வைத்திலிங்கம். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் … Read more

டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி!

Case against EPS, information in Police High Court

டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி! 2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. அப்போது தமிழகத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய மூவரும் முதல்வர் பொறுப்பு வகித்தனர். அத்தகைய காலகட்டத்தில் பல்வேறு குற்றஞ்சாட்டுகளும், ஊழல் புகார்களும் எழுந்தன. இந்நிலையில், 2016 … Read more

எதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்!

எதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்!   தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், கடைசி தினமான நேற்று காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சம்பந்தமான மானிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதனிடையே கடந்த சில வாரமாக அதிமுக பொதுக்குழு வழக்கு சம்பந்தமாக அக்கட்சியினரிடையே பரபரப்பு நிலவி வந்தது. சென்னை உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் எடப்பாடி பழனிசாமியை … Read more

குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!

குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!  அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்தது. திரளான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கவே, அவர் பொதுக்குழுவை கூட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார். இதனை அடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய … Read more