காவிரி ஆற்றுப் பிரச்சனை… ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்!!

0
43

 

காவிரி ஆற்றுப் பிரச்சனை… ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்…

 

காவிரி தொடர்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி முக்கொம்பு ஆற்றில் விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் வலியுத்திய பின்னரும் கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தராமல் பிடிவாதம் பிடித்து வருகின்றது. காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் இன்னும் திறக்கப்படாததால் தமிழகத்தில் விவசாய நிலம் பாலைவனம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். அவமதிப்பு வழக்கு தொடர்ந்து தமழகத்திற்கு உரிய நீரை பெற வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையடுத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 113 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையடுத்து காவிரி பிரச்சனை தொடர்பாக பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 22 நாட்களாக திருச்சி அண்ணா சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

 

இந்த நிலையில் திருச்சி முக்கொம்பில் உள்ள காவிரி ஆற்றில் விவாசயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கைவிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தற்போதைய காலத்தில் தர வேண்டிய நீரை கொடுக்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.