மருத்துவமனை முன்பு ஒன்றுதிரண்ட ஒட்டுமொத்த காவல்துறையினர்! நெகிழ்ச்சியின் எல்லையில் சங்கர் ஜிவால்!

0
54

சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் சங்கர் ஜிவால் அந்த பதவிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இதேபோல அதிமுக ஆட்சிப் பொறுப்பை இழந்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடன் காவல்துறையில் பல முக்கிய அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காவல் துறை இயக்குனராக இருந்த ஏ கே விஸ்வநாதன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு சைலேந்திரபாபு நியமனம் மற்றும் உளவுத்துறை டிஜிபி மாற்றம், என்று பல அதிரடி மாற்றங்களை செய்தது திமுக அரசு.

இந்த நிலையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வரும் சங்கர் ஜிவால் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேற்றைய தினம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று மறுபடியும் சென்னை மாநகர காவல் ஆணையாளராக பணியை தொடர்ந்து வருகிறார். சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆடம்பரத்தையும், விளம்பரத்தையும் விரும்பாத ஒரு சாதாரண நபராக பணியில் இருந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதுவும் அவர் எப்போதுமே மிகவும் நேர்மையாகவும் அதிகாரிகளிடம் மிகவும் கண்டிப்பாகவும் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

இவர் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி தன்னுடைய அலுவலகத்தில் இருந்த சமயத்தில் திடீரென்று வியர்வை ஏற்பட்டதன் காரணமாக, தோள் பட்டையில் கடுமையான வலி உண்டானதால் உடனடியாக அலுவலகத்தில் இருக்கின்ற ஓய்வு அறைக்கு சென்று இருக்கிறார். தனக்கு நெருக்கமான மருத்துவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல் நிலை தொடர்பாக தெரியப்படுத்தி இருக்கிறார் இதனை கேட்டுக்கொண்ட மருத்துவர் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து தனக்கு நம்பிக்கையானவர்களிடம் விஷயத்தை கூறிவிட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார் சங்கர் ஜிவால் அன்றைய தினமே பிபி மற்றும் ஈசிஜி எக்கோ உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு ஆஞ்சியோகிராம் செய்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் நேற்று முன் தினம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி பூரண குணம் பெற்று மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்ல லிஃப்டில் கீழ் தளத்திற்கு வருகை தந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் நான்கு ஜெசிகள்மற்றும் அனைத்து இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் காவல்துறை ஆணையாளர்கள் என்று இரு நூற்றுக்கும் அதிகமானவர்கள் வரவேற்க கூடி இருந்ததாக சொல்லப்படுகிறது. சென்னை மாநகர காவல் துறை வரலாற்றில் ஒரு ஆணையருக்கு உடம்பு சரியில்லை என இப்படி ஒட்டுமொத்த காவல்துறையினரும் ஒன்று திரண்டு வந்தது கிடையாது என தெரிவிக்கிறார்கள்.

இதனை கவனித்த சங்கர் ஜிவால் தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் ஏன் இவ்வளவு கூட்டம் யார் சொன்னது நெஞ்சுவலி அல்லது பைபாஸ் செய்து விட்டார்கள் என்று வெளியில் தெரிவித்து விட்டீர்களா? என்று சிரித்தபடி கேள்வி எழுப்பியிருக்கிறார் சங்கர் ஜிவால் யாரும் திட்டம் போட்டு வரவில்லை அவர்களாகவே வந்து விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார் சங்கர் ஜீவாலுக்கு நெருக்கமான ஒரு அதிகாரி.

அதன் பின்னர் அவர்களிடம் பேசி வழியனுப்பி விட்டு இரவு மட்டும் ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் திங்கள்கிழமை அதாவது நேற்றைய தினம் காலை பணிக்கு போகவேண்டும் என்று கிளம்பிவிட்டார். நேற்றுதான் அவருக்கு டிஜிபி பதவி உயர்வும் காத்திருந்தது. காலை 11 மணி அளவில் டிஜிபி ஆக பதவி ஏற்றுக்கொண்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஆகவே பணி தொடர்கிறார் சங்கர் ஜீவால்.