முக்கியமான போட்டியை தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்! சிக்கலில் இருக்கும் CSK!!

0
136
#image_title
முக்கியமான போட்டியை தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்! சிக்கலில் இருக்கும் CSK!
ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி பெற்றது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நித்திஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட தவறினர். கொல்கத்தா அணியின் சுழல்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிவம் தூபே மட்டும் நிலைத்து விளையாடினார். இதையடுத்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சிவம் தூபே 48 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியில் பந்து வீச்சில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், குர்பாஷ் மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் நித்திஸ் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிங்கு சிங் அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நித்திஸ் ராணா அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்து கடைசிவரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுகளில் முதல் குவிலிபையர் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.