குழுவில் இடம் பெறாத முக்கிய அமைச்சர்! காரணம் என்ன?

0
54

தமிழகத்தில் ஆட்சி மாறியவுடன் செய்தித் துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக ஆதரவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் யாரும் இல்லை இதன் காரணமாக, தலைமை செயலகத்தில் சென்ற காலத்தில் பணியாற்றிய உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்டவர்களை மாற்ற வில்லை. இருந்தாலும் அவர்களை உயர் அதிகாரிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன் அவமரியாதையாக நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

பேரிடர் காலங்களில் கூடுதல் பணி இருக்கும் என்ற காரணத்தால், மற்ற அலுவலகங்களில் பணியாற்றும் ஏ பி ஆர் ஓ மற்றும் பிஆர்ஓ தலைமைச் செயலக பணிக்கு மாற்றப்படுவார்கள். ஆனால் இந்த முறை அப்படி செய்யவில்லை வழக்கமாக பணியில் உள்ள ஐந்து ஏ பி ஆர் ஓக்களிடம் மட்டுமே இரவு பகலாக எல்லா பணிகளையும் செய்திருக்கிறார்களாம். வேலை செய்வது ஒரு பிரச்சனையும் கிடையாது நம்மை அதிமுகவை சேர்ந்தவர்களாக நினைத்து உயரதிகாரிகள் கேவலப்படுத்துவது தான் வலிக்கிறது இதற்கு எங்களை வேறு எங்காவது மாற்றினால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் புலம்பி வருகிறார்களாம். கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டசபை உறுப்பினர்கள் குழு மாநில தலைவர் கே எஸ் அழகிரி நியமனம் செய்தார் அந்த குழுவில் இடம் பெற்று உள்ள செல்வபெருந்தகை, விஜயதாரணி, ரூபி மனோகரன், பிரின்ஸ், போன்ற சட்டசபை உறுப்பினர்கள் சமயத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மலைவாழ் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டம் முடிவடைந்தவுடன் கூடலூரில் எஸ்டேட் வைத்திருக்கின்ற கட்சியின் முன்னாள் சட்ட சபை உறுப்பினர் அருள் அன்பரசு இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் விதவிதமாக ருசித்ததாக தெரிகிறது. விருந்தில் பங்கு பெற்ற ஒரு சட்டசபை உறுப்பினர் மற்றும் அந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளும் ஊட்டியில் எஸ்டேட் மற்றும் நிலம் விலை எவ்வளவு என்ற விவரங்களை கேட்டறிந்து இருக்கிறார். சட்டசபை உறுப்பினர் ஆர்வத்தை பார்க்கும்போது விரைவில் அவர் ஊட்டியில் டீ எஸ்டேட் அல்லது நிலம் உள்ளிட்டவற்றை வாங்குவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் கனமழையின் காரணமாக, பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருக்கின்ற பகுதிகளில் ஆய்வு செய்து பயிர்களை காக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பயிற விபரங்களை அறிவதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்திருக்கிறார்.

இந்த குழுவில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இடம்பெறவில்லை. பயிர் சேதம் கணக்கெடுப்பில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இடம்பெறாமல் இருப்பது அனைத்து தரப்பினரிடமும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியிருக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்சமயம் தான் உடல்நிலை சரியாகி வீடு திரும்பி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் அவரை முதலமைச்சர் குழுவில் சேர்க்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.