மழையால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர்!

0
63

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் கடுமையான மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக, ஏரி, குளங்கள் உள்ளிட்டவை நீரால் நிரம்பின, உபரிநீர் திறந்து விடப்பட்டது.

மழை வெள்ளத்தால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மிக கடுமையாக பாதிக்கப் அதோடு நிற்பதில் அது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர்கள் குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் குழு உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தது.

அந்த அறிக்கையை தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் அமைச்சர்கள் குழு தாக்கல் செய்தது அந்த அறிக்கையை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இதனை அடுத்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய மாவட்டங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மிக கடுமையாக சாலைகள் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரண பணிகளை துரிதப்படுத்தி விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் என கூறப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் சாலைகள் வடிகால் மற்றும் பல உட்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதோட டெல்டா மாவட்டங்களில் கன மழையின் காரணமாக, ஏற்பட்டிருக்கின்ற பயிர் சேதங்கள் தொடர்பாக ஆய்வு செய்து விவசாயிகளை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில், தங்கம்தென்னரசு, எஸ் ரகுபதி, கே ஆர் பெரியகருப்பன், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், எம் ஆர் கே பன்னீர்செல்வம், உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற 11ஆம் தேதி ஆணையிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், இந்த குழு கடந்த 12ஆம் தேதி திருவாரூர், தஞ்சை, நாகை மற்றும் மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து நீரில் மூழ்கிய பயிர்கள் பார்வையிட்டு, பயிர் பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பின்னர் விவசாயிகளை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்தார்கள்.

13ஆம் தேதி அன்று முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வந்தார். பயிர் செய்தல் தொடர்பாக விவசாயிகளிடம் கேட்டறிந்தார் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்றையதினம் பயிர் சேதங்கள் தொடர்பான அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் இடம் அமைச்சர்களுக்கு சமர்ப்பணம் செய்த இந்த குழுவின் அறிக்கை மீதான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட பல உயர் அலுவலர்கள் பங்கேற்றார்கள். விரிவான ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, அறுவடைக்கு தயாராக இருந்த குருவை கார் சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்த பகுதிகளில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை சாகுபடி செய்திட வசதியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும்.

மழை வெள்ளம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பாதிப்படைந்த சாலைகள் வடிகால் மற்றும் மற்ற உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்வதற்கு 300 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.