குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!

0
69

குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!

 

கேரள மாநில குருவாயூர் கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். மேலும், குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன் தங்க கிரீடமும் வழங்கினார்.

 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மனைவியும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அம்மாவுமான துர்கா ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதி ஆவார். அவர்கள் இந்துப் பண்டிகை அனைத்தையும் கொண்டாட கூடியவர் என்றும் தீவிர இந்து மதப் பற்றாளரும் என்றும் கூட கூறப்படுகிறது.

 

சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட அனைத்து பேச இந்துமத பண்டிகைகளை தொடர்ந்து பின்பற்றுபவர் துர்கா ஸ்டாலின் என்று தெரிகிறது.

 

அவர்களின் செயல்பாடுகளும், ஆன்மீக வழிபாடும், திமுகவினர் மற்றும் பிற கட்சியினர் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் கூட நெட்டிசன்கள் இதுகுறித்து மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

திமுக கட்சி ஒரு மதசார்பற்ற கட்சி என்றும் இந்து மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்து மத பண்டிக்கைக்கு வாழ்த்து கூற மாட்டார் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் மற்றொருபுறம் முதல்வரின் மனைவியான துர்கா ஸ்டாலின் அவர்கள் இந்து மத பண்டிகைகளை தொடர்ந்து கொண்டாடி வருவதும், இந்துமத வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருவதுமாக இருந்து வருகிறார்.

 

இவையெல்லாம், திமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் அவர்கள்  ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K