இலங்கைக்கு உதவ முன்வரும் சீனா! காரணம் என்ன?

0
70

நம்முடைய அண்டை நாடான இலங்கை தற்சமயம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. அதன் காரணமாக, அந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மளமளவென அதிகரித்து வருகிறது. அதோடு ஆபரண பொருட்களின் விலைகளை கேட்கவே வேண்டியதில்லை.

மேலும் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் இலங்கை அரசுக்கு எதிராக 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

அதோடு இலங்கையில் பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று புதிய சட்டத் திருத்த மசோதாவை சபாநாயகரிடம் வழங்கியிருக்கிறார். இது ராஜபக்சே குடும்பத்திற்கு மேலும் நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு சீனா உதவிபுரியவிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, இலங்கைக்கான சீனத் தூதர் ஜெங்காங்கான் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை நேற்று முன்தினம் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது இலங்கைக்கு சீனா உதவி புரிய தயாராகயிருப்பதாக தெரிவித்த அவர், அது தொடர்பாக விவாதித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் சீன பிரதமர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தன்னுடைய வலைப்பதிவில் இலங்கைப் பிரதமர் தெரிவித்திருப்பதாவது, சீன பிரதமருடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இலங்கை மக்களின் முக்கிய தேவைகளுக்கு உதவி வழங்க உறுதி அளித்ததாகவும், நீண்டகால நட்புறவும் இலங்கையின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் சீனாவின் இந்த செயல் சாதாரணமாக, பார்ப்பதாகயில்லை சீனா ஒரு நாட்டிற்கு உதவி புரிகிறதென்றால் அதில் ஏதேனும் ஒரு உள்நோக்கம் நிச்சயம் இருக்கக்கூடும் அப்படியான ஒரு உள்நோக்கத்துடன் தான் தற்சமயம் இலங்கைக்கு அந்த நாடு உதவி புரிவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

அதாவது, இலங்கையை வைத்து இந்தியாவிடம் ஏதாவது சில்மிஷம் செய்யலாம் என்று அந்த நாடு கருதுகிறது என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

சீனாவை அவ்வளவு எளிதில் யாரும் நம்பிவிட மாட்டார்கள் ஏனென்றால்,அந்த நாடு செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உள்ளருத்தம் ஒன்றும், வெளியருத்தம் ஒன்றுமாக இருக்கும்.