“படம் ஃப்ளாப் ஆனதால் 80 சதவீத சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன்” இப்படி ஒரு நடிகரா?

0
107

“படம் ஃப்ளாப் ஆனதால் 80 சதவீத சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன்” இப்படி ஒரு நடிகரா?

சிரஞ்சீவியும் அவர் மகன் ராம்சரண் தேஜாவும் நடித்த ஆச்சார்யா திரைப்படம் படுதோல்விப் படமாக அமைந்தது.

சமீபகாலமாக பிரித்திவிராஜ் மலையாள படங்களில் நடிக்கவும் படங்களை இயக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை கதாநாயகனாக்கி முதல் முதலாக இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. மலையாள சினிமாவில் முதல் முதலாக 200 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக அமைந்தது லூசிஃபர்.

இதையடுத்து இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மோகன் லால் வேடத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். பிருத்விராஜ் நடித்த முக்கிய வேடத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கியுள்ளார். தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் உருவான இந்த திரைப்படம் ரிலீஸாகி இதுவரை 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் சிரஞ்சீவி அளித்த ஒரு நேர்காணலில் தனது முந்தைய படமான ஆச்சார்யா தோல்விப் படமாக அமைந்தததால் தான் வாங்கிய சம்பளத்தில் 80 சதவீதத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளார். அதில் “ஆச்சார்யா படத்தின் தோல்வியின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு நானும் ராம் சரணும் வாங்கிய சம்பளத்தில் 80 சதவீதத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டோம்.” எனக் கூறியுள்ளார். அரசியலுக்கு சென்று சினிமாவுக்கு திரும்பிய சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக காட்ஃபாதர் அமைந்துள்ளது.