டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
92

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த புரட்டாசி மாதம் பக்தர்கள்  அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதனால் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகபடுத்தபட்டது.

அதன் மூலம் பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில்  சாமி தரிசனம் செய்ய வரவேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும் அதன் அடிப்படையில் பக்தர்கள் வரும்பொழுது கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.மேலும் தற்போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்களின் எண்ணிக்கை குறைக்கபட்டிருந்தன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க 9 இடங்களில் 90 கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வரும், பக்தர்கள் மட்டுமே டோக்கன்களை பெற்று தரிசனத்திற்கு செல்கின்றனர் எனவே கவுண்டர்கள் அமைக்கப்பட்ட இடங்களின் எண்ணிகையை குறைத்து  தேவஸ்தானம் சார்பில் நான்கு இடங்களில் உள்ள 40 கவுண்டர்களில் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த 1 ஆம் தேதி மதியம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஒன்பது இடங்களில் பக்தர்களுக்கான இலவச தரிசன டோக்கன் வழங்கபட்டது.அந்த வகையில் ஜனவரி 11 ஆம் தேதி வரை எழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.மேலும் ரூ 300 ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை பத்து மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியானது.இவை இன்று மதியத்துடன் நிறைவடைந்து விடும்.

அதனால் திருப்பதியில் செயல்பட்டு வந்த இலவச தரிசன கவுண்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது.இதனை தொடர்ந்து ஜனவரி 12 ஆம் தேதி இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மீண்டும் செயல்பட தொடங்கும்.அப்போது பக்தர்கள் இலவச தரிசன டோக்கனை பெற்று வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம்.

author avatar
Parthipan K