ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா? அவசர ஆலோசனையில் ஸ்டாலின்!

0
64

தமிழ்நாட்டில் நோய் பரவல் அதிகமாகி வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் மீண்டும் அந்த ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கில் அத்தியாவசியத் தேவைகளான காய்கறி மளிகை கடைகள் போன்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மொத்தத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடுகிறது ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் தேவை அறிந்து தமிழக அரசு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் முழு ஊரடங்கு இவ்வாறு நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றால் மிகப் பெரிய பிரச்சனை ஏற்படும் ஆகவே அதற்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த சூழ்நிலையில், முழு ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? அல்லது தளர்வுகள் கொடுக்கலாமா போன்றவை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையின் போது எந்த மாதிரியான தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.