இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர்! பரபரப்பில் சேலம் காவல்துறை!

0
83

ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தற்போது வரையிலும் பல விஷயங்களில் மிகவும் அதிரடியாக செயல்பட்டு வருகின்றார். அவருடைய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல அரசியல் கட்சி தலைவர்கள் இடையையும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரு பாசிட்டிவ் இமேஜ் இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது, அதனை கெடுப்பதற்காக தான் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, ஆனால் இதுவரையில் அதிமுகவின் முயற்சிக்கு பலன் கிடைத்ததாக தெரியவில்லை.

ஒருபுறம் அதிமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் இமேஜை கெடுப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் மறுபுறம் ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்தினால் அதிமுகவின் திட்டம் பலிக்காமல் போய்விடுகிறது. சென்ற சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை முழுவதுமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என கூறினார்.

இந்த சூழ்நிலையில்,, முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக சேலம் மற்றும் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று சேலத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதன்பின்னர் ஆத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்டு ஜவ்வரிசி மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார்.

சேலத்தில் இருந்து காரின் மூலமாக தர்மபுரிக்கு வந்த அவர் 8:15 அளவில் தர்மபுரி அருகே இருக்கின்ற அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்து இருக்கிறார். காவல் நிலையத்தில் இருக்கின்ற தினசரி பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உடன் நேற்று பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தார்.

புகார் மனுக்களை எவ்வாறு விசாரணை செய்கிறார்கள்? முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலமாக அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் முறை என்ன எனவும், அவர் கேட்டறிந்து இருக்கிறார். இதற்கு விளக்கம் அளித்த காவல்துறையினர் காவல்துறையினருக்கு வாரவிடுமுறை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து உள்ளார்கள். சுமார் பத்து நிமிட ஆய்விற்கு பின்னர் வெளியே வந்த முதலமைச்சர் அங்கேயே ஒன்று திரண்டு இருந்த காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களையும், சிறுவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார் அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

முதலமைச்சரின் இந்த திடீர் ஆய்வு காவல் துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது அதேநேரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.